Sunday, December 20, 2020


 

 புதுச்சேரியில் பென்சனர் தினத்தை ஒட்டி சங்க கொடியை மாவட்ட உதவித் தலைவர் தோழர். M.V.ராமகிருஷ்ணன் ஏற்றிவைத்தார். மாவட்டச் செயலர்  த.அன்பழகன் கோஷம் எழுப்பினார். NFTE தமிழ்மாநில தலைவரும்,சம்மேளன பொறுப்பாளருமான தோழர். P. காமராஜ்  உரையாற்றினார். நமது மாநில அமைப்புச் செயலர் திரு. M.சாம்பசிவம், உரையாற்றினார். மூத்த தோழர். N.பட்டாபி வாழ்த்து கோஷம் எழுப்பினார். பென்சனர் தின வரலாறு பற்றி மாவட்டச் செயலர்  த.அன்பழகன் குறிப்புகள் அடங்கிய அறிக்கையை விநியோகித்தார். தோழர்.G.சீனிவாசன். அவர்கள் இனிப்பு வழங்கினார். தோழர். A.நாராயண சாமி, தேநீர் செலவை ஏற்றார். நேற்று இரவிலிருந்து காலை 9 மணி வரை  இடைவிடாமல்  மழை பெய்தும் காலையில் 50 உறுப்பினர்கள் கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்கொண்டது குறிப்பிடத்தக்கது. பேசி முடித்ததும் மழை கொட்டியது. 

=த.அன்பழகன், மாவட்டச் செயலர் புதுச்சேரி

Friday, May 8, 2020

முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதி

கொரோனா பாதிப்பு களைய முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதி அளிக்க நமது சங்க வங்கி கணக்கில் நிதி அளித்தலர் விபரம்:
1. K.கோபி.                1000
2. L வெங்கட்ரமணி1000
3.K.R.சிவகுமார்.      3000
4,S.ராஜலட்சுமி.       1500
மாலதிபத்மநாபன்  1500
6.சித்ரா டெனிஸ்.    1000
7.K.J.ஜாய்.                1000
8.P.சீத்தாராமன்.      1000

நன்கொடை வழங்கியவர்களுக்கு நன்றி. அடுத்த பட்டியல் வசூல் வந்தவுடன் அறிவிக்கப்படும்.
= த.அன்பழகன், மாவட்டச் செயலர்

Tuesday, April 28, 2020

IDA நிறுத்தம் சம்பந்தமாக DG அவர்களின் கருத்து



பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே DPE உத்தரவு பிறப்பிக்க முடியும். சம்பள செலவு அந்தந்த பொதுத்துறை நிறுவனங்களால் ஏற்கப்படுகிறது, மேலும் கருவூலத்திற்கு எந்த சுமையும் இல்லை.

பிஎஸ்என்எல் / எம்டிஎன்எல் ஓய்வூதியதாரர்களுக்கு DPE ,  IDA வை நிறுத்த உத்தரவுகளை வழங்க முடியாது. இது தனித்துவமானது மற்றும் C.G  ஓய்வூதியதாரர்களுக்கு இணையாக கருதினால் DoT அல்லது DoE மட்டுமே ஆர்டர் வழங்க முடியும்.    D.G


Our CHQ has released a e-Journal of our association APRIL 2020. 
A link has been given below. By clicking the link the e-journal could be read.
Please CLICK here to read the e-Journal.

புதுச்சேரி முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதி

கொரோனா பாதிப்பு களைய முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்க நமது சங்க உறுப்பினர்கள் நமது வங்கி கணக்கில் 28-04-2020 வரை செலுத்திய நன்கொடை 3- வது பட்டியல் :

1. G. பாபுஷா.    = 1500
2.  G. ராஜாமணி=1000
3.  N. சுப்பையா. =1000
4. S. ராதாபாய்.   =1000
5. மாலதிபத்மனாபன்=500
6. G .கவுருதீன்.    =1000
7. D. சந்தோஷ்     =1000
8. V. சீனுவாசன்  = 1000
   நன்கொடை வழங்கியவர்களுக்கு நன்றி. அடுத்த பட்டியல் தொடரும்.
= த.அன்பழகன், மாவட்டச் செயலர்

Sunday, April 19, 2020


வருமான வரி சம்பந்தமான செய்திகள்:


---------'-''---------'-'''----'-------'------SAMPANN பென்சனர்கள் எனும்போது பிப்ரவரி-2019- லிருந்து CCA  மூலம் பென்சன் பெறுபவர்கள் மற்றும்  VRS-2019 மூலம் ஓய்வுபெற்றவர்கள் ஆகியோர் வருமான வரிக்கான விருப்பம், மெயில் மூலமாக தெரிவிக்க 25-04-2020   கடைசி தேதி. அந்த விருப்ப படிவத்தில் PPO  எண் என்ற இடத்தில்= உங்களுடைய HR  எண்ணை எழுதி-   PPO  Not issued என எழுதிவிடுங்கள்.

 Option ( விருப்பம்) எனும்போது, 10  லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் Option 1 அல்லது தற்போதைய அளவீடு ( Existing Rate) என்பதை கணக்கில் கொள்ளுங்கள்.
10 லட்சம் மேல் வருமானம் என்றால் Option 2 அல்லது புதிய அளவீடு என்பதை கணக்கில் கொள்ளவேண்டும்.

பிப்ரவரி-2019- க்கு முன்பாக ஓய்வுபெற்று பென்சன் வாங்குபவர்களுக்கும் இந்த அளவீடு பொருந்தும். அவர்கள் வழக்கம் போல வருமான வரி கட்டும் காலத்திலும், கட்டும் வங்கிகளிலும் Form-16 முலம் வரி கட்டவேண்டும்.

வருமான வரி தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வரலாம். அதன்படி நடந்துகொள்ளுங்கள்.

 VRS-2019 மூலம் ஓய்வுபெற்றவர்களுக்கு   PPO உத்தரவு இன்னும் பலருக்கு வெளியிடவில்லை. ஊரடங்கு சட்டத்தினால் பென்சன் அலுவலகம் மூடப்பட்டது.
இம்மாதம்   போடவேண்டிய பென்சன் உத்தரவு, பட்டுவாடா வேலைகள் செய்யவேண்டி உள்ளதால், நமது சங்கம் வலியுறுத்தியதன் பேரில், தற்போது 1 AO, 5 ஊழியர்களைக்கொண்டு பென்சன் அலுவலகம் 16-ந் தேதி முதல் மேற்கண்ட வேலைகளை மட்டும் செய்யும். மற்ற வேலைகளை ஊரடங்கு விலக்கியபிறகு செய்வதாக உள்ளனர்.
= த.அன்பழகன், மாவட்டச் செயலர்

Saturday, April 18, 2020

LIFE CERTIFICATE.

2019 பிப்ரவரிக்குப்பின் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் CCA அலுவலகத்தின் மூலம் வங்கிகளில் ஓய்வூதியம் பெறுகிறார்கள். அவர்கள் ஓய்வு பெற்று ஓராண்டு முடிந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும்  life certificate ஓய்வு பெற்ற மாதத்தில் CCA அலுவலகத்திற்கு கட்டாயம் அனுப்ப வேண்டும். தவறும் பட்சத்தில் ஓய்வூதியம் நிறுத்தப்படலாம்.உதாரணமாக 2019 ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் life certificate அனுப்ப வேண்டும்.


கொரோனா நிவாரண நிதியாக நமது சங்கம் சார்பாக முதலமைச்சரிடம் சமர்பிக்க இதுவரை நமது சங்க கனரா வங்கி கணக்கில் பணம் செலுத்தியவர்கள் விவரம்



     
Total 23483
M.V.Ramakrishnan 1500
V.Gunasekaran 1052
S.Swaminathan 1400
N.Pattabi 1200
M.Krishnasamy 1500
D.Anbalagan 2000
S.Yesu 1000
M.Vathilingan 1000
K.Saravanabhavan 2000
B.Babusha 1500
S.Gowri 1000
P.R.Ganesan 680
V.Udhyanakumar 1850
K.Pavadai 500
K.R.Sivakumar 2000
N.Kandasamy 1001
K.Ramanathan 300
K.Ravichandran 500
R.Mallika 500
K.Murugan 1000

 தோழர்களே, அனைத்திந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கத்தின் புதுச்சேரி மாவட்டத்தின் சார்பில் இன்று  21.12.2023 ஓய்வூதியர் தினம் மிகச் ...