Wednesday, March 5, 2025
Thursday, February 20, 2025
Tuesday, December 17, 2024
தோழர்களே இன்று 17-12-2024 ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு சங்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி காலை 10 மணி அளவில் நடைபெற்றது தோழர் கி.அசோகராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தோழர் கி.அசோகராஜன் கொடி ஏற்றி உரையாற்றினார்.தோழர்கள் சாம்பசிவம்,சதாசிவம்,காமராஜ்,சதாசிவம் AO,முனுசாமி,செல்வரங்கம், தண்டபாணி,ஹரிகரன்,சிவகுமார் ஆகியோர் உரையாற்றினர் இறுதியில் தோழர் ரவனையா நன்றி கூறினார் . 35 தோழர்கள் கலந்து கொண்டனர் மாவட்ட செயலர். புதுச்சேரி
Saturday, November 9, 2024
மாவட்ட செயற்குழு
இன்று 09-11-2024 காலை 10 மணி அளவில் தோழர் கி.அசோகராஜன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயற்குழு நடைபெற்றது.இன்று நடைபெற்ற செயற்குழுவில் செயற்குழு உறுப்பினர் மொத்தம் 29 பேரில் 25 பேர் கலந்து கொண்டனர் விவாதங்கள் நடைபெற்று கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
1. மாநில செயலரால் அங்கீகரிக்கப்பட்ட 29 பேர் கொண்ட பட்டியல் செல்லாது என்ற விவாதத்தில் கே ஆர் ரவிச்சந்திரன் தவிர்த்து அனைவரும் 29 பேர் கொண்ட பட்டியலே நீடிக்க வேண்டும் என விரும்பினர் ஆகவே நான்கு பேர் தானாக முன்வந்து செயற்குழுவில் இருந்து விலகி பார்வையாளராக இருக்க சம்மதிக்காதாலும் இப்போது இருக்கின்ற 29 பேர் கொண்ட பட்டியல் நீடிக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
2.சொசைட்டி சம்பந்தமாக கூடிய விரைவில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
3.தணிக்கையாளராக தோழர் சரவணபவன் DE (Rtd) நியமிக்கப்பட்டார்.
4.மாநாட்டு வரவு செலவு கணக்கு படிக்கப்பட்டு செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.
5.whatsapp குரூப் அட்மின் மாற்றப்பட்டு தலைவர் செயலர் பொருளாளர் மற்றும் மாநில அளவில் கண்காணிப்பாளராக மாநில செயலரும் அட்மின் ஆக இருப்பார்கள் வாட்ஸ் அப் குரூப்பில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தோழர்கள் மட்டும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
6.மாவட்ட செயற்குழுவில் மகளிர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் ஏற்கனவே பார்வையாளராக இருக்கின்ற 11 தோழர்களுடன் சேர்த்து தோழியர் P.K. ரேணுகாதேவி மற்றும் தோழியர் K.சந்திரா SSS ஆகிய இருவரும் பார்வையாளராக இருக்க முடிவெடுக்கப்பட்டது.
முடிவில் தோழர் அ.ஹரிஹரன் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
இவண்.
கு.ரெ.சிவகுமார்
மாவட்ட செயலர்

-
கொரோனா பாதிப்பு களைய முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதி அளிக்க நமது சங்க வங்கி கணக்கில் நிதி அளித்தலர் விபரம்: 1. K.கோபி. 1000 ...
-
அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச் சங்கம். புதுச்சேரி மாவட்டம் தோழர்களே, புதுவை மாவட்ட சங்கத்தின் சார்பில் ஒய்வுதியர் தின சிறப்பு கூ...
-
தோழர்களே நமது மாவட்ட சங்கத்தின் வேண்டுகோளின் படி நமது ஒப்பந்த தோழர் மறைந்த திரு ஆனந்த் அவர்களின் குடும்பத்திற்காக மனம் உகந்து கொடுத்த தொக...