Tuesday, February 14, 2023

தோழர் ஆனந்த் நிவாரண நிதி


 தோழர்களே நமது மாவட்ட சங்கத்தின் வேண்டுகோளின் படி நமது ஒப்பந்த தோழர்  மறைந்த திரு ஆனந்த் அவர்களின் குடும்பத்திற்காக மனம் உகந்து  கொடுத்த தொகை இதுவரை ரூபாய்.  69350/-இத்தொகை இன்று அவர் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. நிதி உதவி செய்த தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. 

 தோழமையுடன் ஹரிஹரன், மாவட்ட செயலாளர்.AIBSNLPWA புதுச்சேரி


Wednesday, February 8, 2023

புதுவை ஆர்பாட்டம் 08-02-2023

 புதுவையில் இன்று ஆர்ப்பாட்டம் தலைவர்,தோழர் அன்பழகன் தலைமையில், ஹரிஹரன் மாவட்ட செயலர் வரவேற்புரையாற்ற 50க்கும் மேற்பட்ட தோழர்களுடன் சிறப்பாக நடைபெற்றது. தோழர் அசோகராஜ், மாவட்ட உதவி செயலாளர்  அவர்களின்  விண் அதிரும்  கோஷங்களுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  தோழர் சிவகுமார், பொருளாளர் நன்றி கூற தேநீருடன் ஆர்ப்பாட்டம் இனிதே முடிவு பெற்றது.

தோழர்களே, மாவட்ட சங்கத்தின் வேண்டுகோளின் படி இன்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 தோழமையுடன் ஹரிஹரன் மாவட்ட செயலாளர்










08-02-2023 ஆர்பாட்டம்

 தோழர்களே நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக, அகில இந்திய சங்கத்தின்  முடிவின்படி, ஏழாவது சம்பளக் குழுவின் அடிப்படையில் நமது ஓய்வூதியத்தை மாற்றித் தருமாறு கோரி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

 இடம் தொலைபேசி யகம் புதுச்சேரி காலை மணி 10. 00

 தோழமையுடன் ஹரிஹரன் மாவட்ட செயலர்.

 தோழர்களே, அனைத்திந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கத்தின் புதுச்சேரி மாவட்டத்தின் சார்பில் இன்று  21.12.2023 ஓய்வூதியர் தினம் மிகச் ...