Thursday, March 31, 2022

DGM(CFA),DGM(FIN) சந்திப்பு



 இன்று நமது மாவட்ட சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் DGM(CFA),DGM(FIN) அவர்களை சந்தித்து புதிய நிர்வாகிகள் பட்டியலை சமர்பித்து வாழ்த்துகளை பெற்றோம்.நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு  தருவதாக செயலர்  உறுதி அளித்தார் .



Wednesday, March 23, 2022

புதுச்சேரி மாவட்ட மாநாடு

 அன்பு ஓய்வூதிய தோழர்களே, தோழியர்களே வணக்கம்.


நமது அனைத்து இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச் சங்கத்தின், புதுச்சேரி கிளையின் 5 வது  மாவட்ட மாநாடு சென்ற 19-03-2022 அன்று தோழர் கு. இர. சிவக்குமார் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடந்தது. மாநாட்டில் கீழ்க்கண்ட தோழர்கள் புதுச்சேரி மாவட்ட சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டார்கள்.


தலைவர்: தோழர் டி. அன்பழகன் SSS (Retd)


துணைத் தலைவர்கள்

தோழர்கள்

1. நா. முனுசாமி, SSS (Retd)

2. எம். தண்டபாணி, TT (Retd)

3. கே. ஆர். ரவிச்சந்திரன், SSS (Retd)

4. எஸ். சையது முகம்மது இஸ்மாயில், TT (Retd)

5. டி. குமார், SDE (Retd)

6. எஸ். பச்சையப்பன்,TT (Retd)   

7. பி. ஆறுமுகம், TT (Retd)


செயலாளர்: தோழர். ஏ. ஹரிஹரன், JAO (Retd)


துணைச் செயலாளர்கள்

தோழர்கள்

1. ச. சதாசிவம், SSS (Retd)

2. கே. அசோகராஜன், TT (Retd)

3. எம். ரவணையா, TT (Retd)

4. பி. ராமகிருஷ்ணன், SDE

5. எஸ். சிவலிங்கம், TT (Retd)

6. ந. வீரபத்திரன், STS (Retd)

7. ஏ. கண்ணம்மாள் , SDE


பொருளாளர்: தோழர் .K.R. சிவக்குமார், SDE (Retd)


உதவிப் பொருளாளர் தோழர் கே. அருணகிரி, TT (Retd)


அமைப்புச் செயலாளர்கள்:

1. பி. செல்வன், TT (Retd)

2. எஸ். அசலாம்பிகை, SSS (Retd)

3. எம். செல்வரங்கம்,TT (Retd)

4. எஸ். ரவீந்திரன்,STS (Retd)

5. ஆர். தனுசுராமன்,TT (Retd)

6. எஸ். சண்முகசுந்தரம், TT (Retd)

7. வி. சேகரன்.TT (Retd)


மாநாட்டில் கலந்து கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய மதிப்பிற்குரிய மத்திய சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர் தோழர் க. முத்தியாலு, மதிப்பிற்குரிய தமிழ் மாநிலத் தலைவர் தோழர் வெ. ராமாராவ்,மதிப்பிற்குரிய தமிழ் மாநில செயலாளர் தோழர்  ஆர். வெங்கடாச்சலம், மதிப்பிற்குரிய தமிழ் மாநில உதவிச் செயலர் தோழர். சி. சுந்தரகிருஷ்ணன் ,அருமை தோழர் மு.சாம்பசிவம் மாநில அமைப்புச் செயலாளர் ஆகியோர்  முன்னிலையில் மதிப்பிற்குரிய

தோழர் பி. காமராஜ் முன் மொழிய, மதிப்பிற்குரிய மூத்த தோழர் எஸ். யேசு வழி மொழிய புதிய நிர்வாகிகள் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது.



மேற்படி புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநாட்டின் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு மாநாட்டின் தலைவர் தோழர் கு. இர. சிவக்குமார், மதிப்பிற்குரிய மாநிலச் செயலாளர் தோழர் இரா. வெங்கடாசலம் இருவரும் இந்த பட்டியலை அங்கீகரித்து உள்ளார்கள்.


இப்படிக்கு

உறுப்பினர்களின் சேவைக்காகக் காத்திருக்கும் அன்பு தோழன் ஏ. ஹரிஹரன், 

மாவட்டச் செயலாளர்


 

Sunday, March 20, 2022

புதுச்சேரி மாவட்ட மாநாடு

 புதுச்சேரி மாவட்ட மாநாடு 19-03-2022 அன்று புதுச்சேரி ஆர்ய வைசிய வாசவி மஹாலில் தோழர் கு.ரெ.சிவகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தேசிய கொடியை மாநில அமைப்பு செயலர் தோழர் மு.சாம்பசிவம் அவர்களும் சங்க கொடியை முன்னால் மாநில உதவிப் பொருளாளர் தோழர் ச.சதாசிவமும் ஏற்றினர். புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன்  மாநாட்டினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். தமிழ் மாநில செயலாளர் தோழர்  இரா.வெங்கடாசலம் துவக்க உரை ஆற்றினார்.ஆண்டு அறிக்கையை தோழர் த.அன்பழகனும் வரவு செலவு கணக்கை தோழர் இரா.லோகநாதனும் சமர்ப்பித்தனர்.அ.இ.துணைப் பொதுச்செயலாளர்  தோழர் க.முத்தியாலு,தமிழ் மாநில தலைவர் தோழர் வெ.ராமராவ் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.  மாநில உதவிச் செயலர் தோழர் சி.சுந்தரகிருஷ்னன்,மாநில அமைப்பு செயலர் தோழர் மு.சாம்பசிவம், BSNL நிர்வாகம் சார்பில் துணைப் பொது மேலாளர்  திரு மு.சண்முகசுந்தரம் SNEA  சங்கத்தின் சார்பாக தோழர் ப.ஹரிதாஸ், NFTE சங்க சார்பாக அதன் மாவட்ட செயலாளர் தோழர் சை.சையது அபுபக்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மூத்த தோழர்கள் கவுரவிக்க பட்டனர். மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக  தலைவராக  தோழர் த.அன்பழகன் செயலராக தோழர் A.ஹரிகரன் பொருளராக தோழர் கு.ரெ.சிவகுமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தோழர் இரா.லோகநாதன் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவு பெற்றது 

 தோழர்களே, அனைத்திந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கத்தின் புதுச்சேரி மாவட்டத்தின் சார்பில் இன்று  21.12.2023 ஓய்வூதியர் தினம் மிகச் ...