Saturday, November 30, 2019

CGHS









நெல்லையில்
AIBSNLPWA...
சார்பில் நினைவு அஞ்சலி .
*******

கும்பகோணத்தில் நடந்த பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு வரும் வழியில் திருச்சியில் அன்பு மகள் வீட்டில் திடீர் சுகவீனம் காரணமாக  26 11 2019 அன்று  இயற்கை எய்திய நமது அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கத்தின் அகில இந்திய துணை செயலாளரும் நெல்லை மாவட்ட சங்கத்தின்  மாவடட செயலாளருமான
தோழர்  அருணாச்சலம் அவர்களுக்கு சார்பில் நடந்த நினைவு அஞ்சலி...



மதியம் ஒரு மணிக்கு மாநிலத் தலைவர் ரமாராவ்அவர்கள் தலைமையில் நடந்த நினைவஞ்சலியில் அகில இந்திய சங்கத்தின் சார்பில்  தோழர் முத்தியாலு, மாநிலச் சங்கத்தின் சார்பிலே தோழர் ஆர்.வெங்கடாசலம் ,
அகில இந்திய சங்கத்தின்  தலைவர், செயலாளர்
சார்பாக தோழர் D.கோபாலகிருஷ்ணன் ,  தூத்துக்குடி தோழர் அம்பிகாபதி,
 மதுரை தோழர் G.R.தர்மராஜ் ,நெல்லை மாவட்ட ஓய்வூதியர்
கூட்டமைப்பின்  செயலரும் , அஞ்சல் பகுதி ஓய்வூதியர்சங்கத்தின்  செயலருமான தோழர் சண்முகசுந்தரராஜ், நெல்லை மாவட்ட சங்கத்தின்  தலைவர் சம்மனசு ஆகியோர் தங்கள் நினைவுகளை கண்ணீரோடு பகிர்ந்து கொண்டனர் . அங்கிருந்த அனைவரையும் நெஞ்சை நெகிழ வைத்தது.
இரங்கல் கூடடத்தில்  பேசிய அனைத்து தலைவர்களும் தொலைபேசித் துறையில் இயக்குனராக பணி தொடங்கி காலத்தில் இருந்து  சங்கத்தின் உறுப்பினராய் கிளைச் செயலாளராய் மாவட்ட செயலாளராய் மாநிலச் சங்க நிர்வாகியாய்அகில இந்திய நிர்வாகியாய் அவரது  தொழிற்சங்க வரலாற்றில் தொடக்கத்தில் இருந்து நேற்றுவரை அவர் ஆற்றிய  பணி மகத்தானது .
ஈடு இணை இல்லாதது என புகழ்ந்தார்கள்
👌அவருடைய நேர்மை
👌அவருடைய எளிமை
👌 அவருடைய பணிவு
👌எது நடந்தாலும் அமைதிகாக்கும் மனச் சமநிலை
👌எல்லோருக்கும் ஓடி ஓடி உதவிடும் மாண்பு
👌பிஎஸ்என்எல் பணியாளர் மட்டுமன்றி பிறதுறை களின் தொழிற்சங்கம் சார்ந்த அனைத்து அரசு விதிகளையும் நன்கு அறிந்து பிறருக்கு புரியும் வகையில் எளிதாக விளக்குகின்ற ஒரு பேராற்றல் கொண்டவர் என்றும் சிறப்பித்தார்கள்.

 பிஎஸ்என்எல் பணியாளர்கள், ஓய்வூதியர்கள் இல்லங்களில் நடக்கின்ற அனைத்து விழாக்களிலும்  தவறாமல் கலந்து சிறப்பிப்பது இவர் வழக்கம்.
 மாதம் தன்னுடைய சொந்த ஓய்வூதியத்தில் உத்தேசமாக 5 ஆயிரம் வரை செலவழித்து தினமும் அலுவலகத்திற்கு வருவதுபோல் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள நம்முடைய AIBSNLPWA  மாவட்ட சங்க
நெல்லை வண்ணார்பேட்டை  அலுவலகத்திற்கு வந்து காலையிலிருந்து மாலை வரை அனைத்து பணிகளையும் அவரே தம் கைப்பட செய்ததை எல்லோரும் நினைவு கூர்ந்தார்கள்.

 அதுவும் குறிப்பாக
பொதிகை தென்றல் இதழினை வடிவமைப்பதில் வெளிக்கொண்டு வருவதில் அவருடைய முத்தாய்ப்பான செயல்களை எல்லோரும் பாராட்டினார்கள்.
இவரின் கடும் முயற்சியில் இரண்டு தினங்களுக்கு முன்னால் தோழர் D.G அவர்களின் அணிந்துரையுடன் நமது AIBSNLPWA மாநில சங்கம் சார்பில்  வெளிவந்து பலரின் பாரட்டினை பெற்ற மத்திய அரசு மருத்துவ  உதவி திடடம் பற்றிய கை ஏடு பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார்கள்.
மெய் வருத்தம் பாராமல்
பசி நோக்காமல்
கண் துஞ்சாமல்
இமைப்பொழுதும்
சோராது
பொது நலப் பணி ஆற்றிய தோழர் அருணாச்சலம் அவர்களுக்கு
 நாம் காட்டுகின்ற நன்றி அவர் விட்டுச் சென்ற பணியை தொய்வில்லாமல் மிக நேர்த்தியாக செய்வதாக எல்லோரும் சபதம் எடுத்துக் கொண்டார்கள் .

Tuesday, November 12, 2019

Mode Of Submission Of Life Certificate


I. Submission of Life Certificate at any Branch of SBI
1. Manually - Life certificate can be summited in physical format

2. Digitally: - Visit any Branch of SBI. Provide Aadhaar number, Mobile number, Pension Payment Order(PPO) number & Account number. Then provide biometrics (Fingerprint). On successful Aadhaar based biometric authentication, Jeevan Pramaan will be generated with a unique id called Pramaan Id as acknowledgement.

II. Submission of Life Certificate Digitally through https://jeevanpramaan.gov.in using own PC/Laptop/Mobile


III. Submission of Life Certificate Digitally through GoI UMANG App on Mobile

Pensioner have to download UMAMG app from google play store, search Jeevan Pramaan and click on generate life certificate. Pensioner Authentication page will open. Required information to be feeded for generation of DLC.

IV. At Citizen Service Centre (CSC) / Aadhar Seva Kendra

Visit nearest CSC or Aadhaar Seva Kendra. Provide Aadhaar Number, Mobile Number, Pension Payment Order(PPO) number, Account number & name of Pension Sanctioning Authority. Then provide biometrics (Fingerprint). On successful Aadhaar based biometric authentication, Jeevan Pramaan will be generated with a unique id called Pramaan Id as acknowledgement.

Note: - If pensioner is re-employed or family pensioner is re-married, life certificate can be provided only in physical format.


LIFE CERTIFICATE PENSION AND TELEPHONE


உயிர் வாழ்  சான்றிதழ்

தோழர்களே,
நாம் ஓய்வூதியம் பெறுகின்ற  வங்கிக் கிளை அல்லது தபால் நிலையத்தில் நாம்  உயிர் வாழ்  சான்றிதழை நவம்பர் மாதம் அவசியம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் டிசம்பர் மாத ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் ஏற்படும் . இந்தியன் வங்கி அனுப்பியுள்ள எஸ்.எம் எஸ் பிரகாரம் நம்முடைய ஆதார் மற்றும் பாண் கார்ட் ஒரிஜினல் மற்றும் செராக்ஸ் காப்பி  வங்கி  பாஸ் புத்தகம் கொண்டு செல்ல வேண்டும் .உயிர் வாழ் சான்றிதழை கொடுத்துவிட்டு வங்கியாளர் பெற்றுக்கொண்தற்கான ஒப்புகை சீட்டு கேட்டுப் பெறவும். கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கவும்.
மேலும் நாம் வாடகையில்லா தரை வழி தொலைபேசி சர்விஸ் கனெக்சன் வைத்திருக்கிறோம். அங்கேயும் நாம் உயிர் வாழ்  சான்றிதழை இந்த நவம்பர் மாதத்திற்குள் கொடுக்க வேண்டும். இல்லையெனில் தொலைபேசிக்கு வாடகை கட்ட வேண்டியிருக்கும்.இலவச அழைப்புகளை இழக்க வேண்டியிருக்கும். PPO புத்தகத்தை எடுத்துச் சென்றால் பத்திரமாக வீட்டிற்கு கொண்டுவரவும்


CGHS–NON COVERED AREA PENSIONERS


CGHS–NON COVERED AREA PENSIONERS 



தமிழ்நாடு CGM அலுவலகத்திலிருந்தும் CGHS SURRENDER CERTIFICATEக்கான உத்தரவுகள் நேற்று வெளியாகி விட்டது. ஏற்கனவே STR, STP, CHTD பகுதிக்களுக்கும் இந்த உத்தரவுகள் வெளியாகி விட்டது.
எனவே தமிழ்நாட்டின் அனைத்து பகுதியில் உள்ள STR, STP, TN ல் பணிபுரியும் அனைவரும் இனி CGHS CARD க்கு விண்ணப்பிக்கலாம். 
                                                                                                                                                                                   
அவர்களுக்கான சில விளக்கங்களை கீழே கொடுத்துள்ளோம். 
                                                                                                             1.
தற்போது சென்னை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய இடங்களில் மட்டுமே CGHS அலுவலகங்கள் உள்ளன. அந்த பகுதியில்  உள்ளவர்கள் அங்கு CGHS CARD பெற்றுக்கொள்ளலாம்.   
2.
இந்த இடங்களில் இல்லாத CGHS NON COVERED AREA  வில் உள்ளவர்களும் CGHS CARD பெறலாம். அவர்கள் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள ஏதாவது ஒரு CGHSஐ தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்து CGHS CARD பெற்றுக் கொள்ளலாம்.
3. CGHS NON COVERRED
பகுதியில் உள்ளவர்களுக்கு மட்டும் ஒரு OPTION உண்டு.
4.
அவர்கள் அவுட்பேஷண்ட் ட்ரீட்மென்ட்இன்பேஷன்ட் இரண்டும் வேண்டும் என்று சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.   
5.
அல்லது அவுட்பேஷன்ட் ட்ரீட்மென்ட் வேண்டாம், இன்பேஷன்ட் ட்ரீட்மென்ட் மட்டும் போதும் என்று கேட்டு விருப்பம் கொடுக்கலாம். அப்படி விருப்பம் கொடுக்கும்போது விண்ணப்பப் படிவத்தின் மேலே “FOR INPATIENT TREATMENT ONLY” என்று எழுதி, எந்த ஊரிலுள்ள CGHS வேண்டும் என்றும் குறிப்பிட வேண்டும்.  
6.
அவுட்பேஷன்ட் ட்ரீட்மென்ட் வேண்டாம் என்பவர்களுக்கு FMA உண்டு. ஆனாலும் அவர்களுக்கு இன்பேஷன்ட் ட்ரீட்மென்ட் பெற தகுதி உண்டு. 
7.
அவுட்பேஷன்ட் ட்ரீட்மென்ட்டு வேண்டும் என்பவர்களுக்கு அவர்களது CGHSல் 3 மாதங்களுக்கான மருந்து மாத்திரைகளைப் பெற்றுக் கொள்ளலாம். 
8.
இந்த சலுகைகள் CGHS NON COVERED AREA வில் உள்ள BSNL PENSIONERகளுக்கு மட்டுமே பொருந்தும். 
9. CGHS CARD 
பெறுவதற்கான வழிமுறைகள் COVERRED AREA, NON-COVERRED AREA இருவருக்கும் பொதுவானவையே.
10.
எனவே CGHS NON – COVERRED AREA வில் உள்ள STP, STR, TN பென்ஷனர்கள் மேல் சொன்ன விஷயங்களை கவனத்தில் கொண்டு ஒரு நல்ல முடிவை அவர்கள் மேற்கொள்ள வேண்டுகிறோம். 


 தோழர்களே, அனைத்திந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கத்தின் புதுச்சேரி மாவட்டத்தின் சார்பில் இன்று  21.12.2023 ஓய்வூதியர் தினம் மிகச் ...