Thursday, July 25, 2019

நாடாளுமன்ற அவையில் BSNL-ன் நிலை பற்றி திருச்சி N..சிவா,M.P அவர்களின் உரை:

தன்னுடைய புகழை தக்கவைக்கும் வல்லமையுடன் BSNL உள்ளதுஅதற்கான கட்டமைப்பும்மனித சக்தியும் அதற்கு உள்ளது. BSNL-ன் பெருமையை குலைக்கும்தீய உள்நோக்கத்துடன்       BSNL பற்றிநலிவடைந்துவிட்டதுஆரம்பநிலை புற்றுநோய்நட்டம் ஏற்படுத்தும் தொழிற் நிறுவனம் என்பது போன்ற தவறானகருத்துக்களை ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றனஅதோடு மட்டுமல்ல, BSNL தனியார்மயமாகப் போகிறதுஅல்லது BSNL- மூடப் போகிறார்கள் போன்றதவறான குறிப்புகளை பொதுமக்களீடம் தருகிறார்கள்தொலைத்தொடர்பு அமைச்சர் BSNL-  சீரமைக்கும் திட்டத்தில் இருந்தாலும்இந்த ஊடகங்களின்பரப்புரையை அரசும் விரும்புகிறது.
     
        கேன்சர் போன்ற நோயுற்ற நிலையிலா  BSNL உள்ளதுஇல்லைஇன்னும் BSNL தனது கட்டமைப்புதிடத்தன்மைஅதற்கெனவே பாடுபடும் ஊழியர்கள்,ஒவ்வொரு மாதமும் உயர்ந்துவரும் கைப்பேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கொண்டே விளங்குகிறது.
    
       31-03-2019 வரையிலான சில விபரங்களை தெரிந்துகொள்வோம்:

சொத்துக்கள் :

·         11.56 கோடி கைப்பேசி வாடிக்கையாளர்கள், 1.11 கோடி தொலைபேசி ஆக மொத்தம் 12.68 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ( இதில் 3.94 கோடிகிராமப்புற தொலைபேசி வாடிக்கையாளர்களும் அடங்குவர்.)  பிராட்பேண்ட் மற்றும் ADSL, FTTH, Wi-max, Wi-fi          உள்ளிட்ட சேவைகளுக்கு 2.15 கோடிவாடிக்கையாளர்களும் உள்ளனர்..
·         32,760 தொலைபேசி நிலையங்கள் ( கிராமப்புறத்தில் 24,029, நகர்புறத்தில் 8,641 நிலையங்கள்)   OFC வலைத்தளச் சேவையை 8.49 லட்சம் கிலோ மீட்டர்வழித்தடங்கலில் தருகிறது.  2548 கி.மீ மைக்கரோ அலைவழிச் சேவை, 95 சாட்டிலைட் மையங்களும் 67,618 டவர்களும் உள்ளன.
·         கிராமப்புறநகர்புறங்களில் 2G 3G சேவைக்காக GSM BTS 1,46,065 உள்ளது. 6,383 நகரங்களில் 3G  சேவை தரப்படுகிறது.
·         1,32,229 கிராமங்களுக்கு  தொலைத்தொடர்பு இணப்பு தரப்பட்டுள்ளது. GSM & தொலைபேசி இணைந்த வெளிச் சந்தையில் 10.58% பங்கு ( 4-வது இடத்தில்,அதாவது வோடாபோன் --ஐடியாபாரதி-ஏர்டெல்ரிலையன்ஸ்-ஜியொ-வுக்குப் பிறகு)
·         ஊழியர்கள் எண்ணிக்கை = 1,66,974  அதில் 2018-2019-ல் ஊழியர்கள் குறைவு= 16,548.
·         தோராயமாக நிலம்கட்டிடங்களின் மதிப்பு பல லட்சம் கோடி ரூபாயாகும்.
·         முக்கியமான மையப்பகுதிகளில் ஊழியர் குடியிருப்புகள் உள்ளது,
·          மேற்கு வங்கம்மத்திய பிரதேஷ்சத்தீஸ்கர்மும்பை ஆகிய மாநிலங்களில் 7 டெலிகாம் தொழிற்சாலைகள் உள்ளனகாசியாபாத் மற்றும் ஜெபல்பூரீல்நவீனமயமாக்கப்பட்ட 2 பயிற்சி மையங்கள் உள்ளது. 20 RTTC-க்கள்,  CTTC-க்கள் ( பயிற்சி மையங்கள் ) உள்ளது.

·         ரயில்வேயை தவிர்த்து இந்தியாவில் வேறு எந்த நிலையான நிறுவனங்களுக்கும் இவ்வளவு அதிகமான நிலங்கள்கட்டிடங்கள் அடங்கிய சொத்துக்கள்கிடையாது.
               
 ரிலையன்ஸ்-ஜியொ-வைத் தவிர்த்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் வாடிக்கையாளர்களை இழந்து வரும் நிலையில், BSNL மட்டும் ஒவ்வொருமாதமும் கைப்பேசி இணைப்புகள் அதிகரித்து வருகின்றன.



வருவாய்செலவினம்நட்டம்மதிப்புக்குறைவு எவ்வளவு ? - விபரம் :

வருடம்
வருவாய்
செலவினம்
நட்டம்
மதிப்புக்குறைவு
2013 -14
27,996 கோடி
34,930 கோடி
7,020 கோடி
6,023 கோடி
2014 -15
28,645  ‘’
37,292   ‘’
8,234    ‘’
8,817   ‘’
2015 -16
32,411  ’’
37,270   ‘’
4,859    ‘’
7,206   ’’
2016 -17
31,533  ‘’
36,327   ‘’
4,793    ‘’
6,330   ‘’
2017 -18
25,071  ‘’
33,808   ‘’
7,993    ‘’
5,832   ‘’

செலவினங்களில் மதிப்பீட்டுக் குறைவான தொகை கணக்கீட்டினால் தான் நட்டம் தெரிகிறது.  இது சரியான செலவினம் அல்லமாறாகநிலம்கட்டிடம் மீதானசதவீத மதிப்பீட்டு குறைவான கணக்கினால் ஏற்பட்டதுமதிப்பீட்டுக் குறைவை நீக்கி உண்மையான செலவினத்தை கணக்கில் கொண்டால்நட்டம் என்பதுகுறைந்தபட்சமே.

10,000 முதல் 17,000 ஊழியர்கள் வருடந்தோறும் பணி ஓய்வு பெறுவதாலும்பணி ஓய்வு பெற்ற இடத்தில் வேறு ஊழியர் நியமிக்காததாலும்ஊழியர்களின்சம்பளம் உயர்த்தப்படாமல்நிலையானதாகவே இருந்தது.
     
4G  ஸ்பெக்ட்ரம் சேவை அளிக்கப்படாததாலும்,  DOT- யிலுருந்து 14,000 கோடி BSNL-க்கு திருப்பித் தராததாலும்உயர்த்தப்பட்ட பென்சன் பங்களிப்புத் தொகையைBSNL--க்கு திருப்பித் தராததாலும், 2000-த்தில் பொதுத்துறையாகும் நேரத்தில் இருந்த நிதிக்கடன் பற்றி அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததாலும், BSNLநட்டத்தில் செல்லவேண்டிய காரணமாக அமைந்தது.

     மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள்ஒவ்வொன்றும் ஒரு லட்சம் கோடிக்குள் உள்ள நிலையில், BSNL-ன் கடன் வெறும் 14,000 கோடி தான்இந்த கொள்ளைவிலை மற்றும் விதிகளை மீறிய ரிலையன்ஸ்-ஜியோ செயல்களால் அனைத்து நிறுவனங்களும் நட்டத்தில் செல்லக் காரணமாக அமைந்தது.

     நிதி அயோக்கின் பரிந்துறைப்படிஒவ்வொரு பொதுத்துறை நிறுவனங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக தனியார் மயமாக்குதல் அல்லது மூடிவிடுவது என்பதுஅரசின் கொள்கை முடிவாக உள்ளதுலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு தருவதைமூடப்படுவதைப் பற்றிபொதுமக்களிடமிருந்து கேள்விகள் எழும்அதனால்தனியார் மயமாக்கும் முன்பாகவும்மூடப்படும் நிலைக்கு முன்பாகவும் BSNL -நிறுவனத்தைநட்டமடையச் செய்தால்தான் தனியாருக்கு மாற்றவோவிற்கவோ பொதுமக்களிடமிருந்து கேள்விகள் எழாதுவிருப்ப ஓய்வு திட்டம் ( VRS  ) என்பதுசேவையை சீரழிக்கும் மற்றொரு ஆயுதம்இதைத்தான்  BSNL-ல் அமல்படுத்த அரசு நினைக்கிறதுஇதைப் போராடியே தோற்கடிக்கமுடியும்.
                                
      BSNL/MTNL-களை தனியார் மயமாக்குவதோ அல்லது மூடுவதோதொலைபேசி சேவைக்கு வாடகைமற்றும் கட்டணங்களை உயர்த்தவே வழி வகுக்கும்என்பதை வாடிக்கையாளர்களும்பொதுமக்களும் நன்கு அறிவார்கள்பெட்ரோல் விலை தினம் தினம் உயர்வது போலதொலைபேசி கட்டணங்களும்தினசரி உயரும்இது அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் உள்ள 120 கோடி வாடிக்கையாளர்களை பாதிக்கும்.
      வேலை செய்வோரும்அதிகபட்ச சேவை தருவதன் மூலம்பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு உறுதிபடுத்தப்படும். BSNL-ஊழியர்கள் மற்றஊழியர்களைக் காட்டிலும் நல்ல சம்பளம் பெரும்போது அவர்களின் சேவை மேலும் சிறப்பாக அமையவேண்டும்.  BSNL  ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்டநியாயமான கோரிக்கைகள்அதற்கான போராட்டங்களும் நடந்தனஆனால், BSNL- நிலைநிறுத்த செய்யும் முயற்சி ஒன்றே ஊழியர்களின் உடனடி தேவையானமுக்கியமான ஒன்றாகிவிட்டது.

     மேலே குறிப்பிட்டபடி BSNL நலிந்து போகவும் இல்லைதேவையில்லாமலும் போகவில்லைஉலகின் 7-வது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற புகழ்பெற்றநிலையை மறுபடியும் நிலைநிறுத்தமுடியும்.
    
வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவை செய்யவும் , BSNL  வலிமையாகவும்திறம்பட்ட அமைப்பாகவும் அமைய பொதுமக்கள் முழு ஆதரவு தர வேண்டும்.
==================================================================================================
தமிழாக்கம்  = .அன்பழகன்மாவட்டச் செயலர்,
              அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச் சங்கம்புதுச்சேரி       22-07-2019