Thursday, December 21, 2023

 தோழர்களே,

அனைத்திந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கத்தின் புதுச்சேரி மாவட்டத்தின் சார்பில் இன்று  21.12.2023 ஓய்வூதியர் தினம் மிகச் சிறப்பாக தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட 

விழாவிற்கு மாவட்டத் தலைவர் தோழர் நா .முனுசாமி தலைமை தாங்கினார். தோழர் ஹரிஹரன் மாவட்டச் செயலர் வரவேற்றார்.விழாவில் சமீபத்திய புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட நன்கொடை வசூல் செய்து மாநிலச் சங்கத்திற்கு அனுப்புவது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஒவ்வொரு உறுப்பினரிடமுமிருந்து ரூ.200/- நன்கொடை வசூல் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக சமீபத்தில் காலமான தோழர்கள். பட்டாபி, செல்வராசு, முத்துவேல் ஆகியோருக்கு தோழர்கள் எம் வி ராமகிருஷ்ணன், கே ஆர் சிவக்குமார், கிருஷ்ணசாமி, உத்தமபுத்திரன்,கே ஆர் ரவிச்சந்திரன், அய்யாதுரை, அசோகராஜன், ஜி சதாசிவம், சுப்பையா மற்றும் இயேசு ஆகியோர் புகழ் அஞ்சலி செலுத்தினர். மற்றும்  மறைந்தமார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சங்கரய்யா அவர்களுக்கும்  அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் "முதுமை.. முடிவல்ல தொடக்கமே" எனும் தலைப்பில் முனைவர் க  பஞ்சாங்கம் சிறப்பானதொரு உரையை வழங்கினார்.. மாவட்ட பொருளாளர் தோழர் கு.ரெ

.சிவகுமார் நன்றி கூற விழா மதிய உணவுடன்  இனிதே நிறைவுற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும், வெள்ள நிவாரண நிதி வழங்கிய தோழர்கள் அனைவருக்கும், மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


 தோழமையுடன் ஹரிஹரன் மாவட்ட செயலாளர்.

21-12-2023

ஓய்ஊதியர் தின விழா