Wednesday, August 15, 2018

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடை தாரீர்

நீங்கள் அனைவரும் அறிந்திருக்கலாம் கேரளாவில் பெய்த பேய்மழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக கடுமையான நிலைமையை அந்த நாடு சந்தித்து கொண்டிருக்கிறது. இப்போது ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் . அவர்கள் வீடு, பொருட்கள், கால்நடைகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். கிராமங்களில் இயல்பான வாழ்வை மீட்டெடுப்பதற்கு பல மாதங்கள் ஆகும்.
கேரள அரசு இந்த சூழ்நிலையை பாராட்டத்தக்க அளவில் திறமையாக கையாண்டு கொண்டிருககிறது.ஆனால் அது போதாது. சென்னை முழுவதும் வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் நாம் அனைவரும் நிவாரண பணிக்காக பங்களித்தது போல் இப்போதும் செயல்பட வேண்டும். நமது கேரள மாநில சங்கம், முதலமைச்சரின்  நிவாரண நிதிக்கு ஓரு லட்சம் ரூபாய் திரட்டி தர முடிவெடுத்துள்ளது.

முன்னொருபோதும் இல்லாத துயரத்தை எதிர் கொள்ளும் கேரள மக்களுக்கு மற்ற மாநிலங்களில் உள்ள நமது சங்கங்கள் அதிகபட்ச உதவியை அளிக்க வேண்டும். எனவேகேரள மாநில சங்கத்திற்கு நன்கொடை அனுப்பும்படி அனைத்து மாநில சங்கங்களுக்கும்  முடிந்தவரை உடனடியாகச் செய்யப்பட வேண்டும் என்று  நமது அகில இந்திய சங்கம் அழைப்பு விடுக்கின்றது

No comments:

Post a Comment