Monday, August 27, 2018
சில்கா ஏரி
சில்கா ஏரி இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஒடிசா மாநிலத்தின் பூரி, குர்தா மற்றும் கஞ்சம் மாவட்டங்களின் வழியாக, 1,100 கிமீ 2 பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ஒரு சதுப்பு நிலப்பகுதி ஆகும். இந்தியாவின் மிகப்பெரிய கடல் நீரேரி மற்றும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடல் நீரேரி ஆகும்
சில்கா ஏரி இந்திய துணை கண்டத்தில் புலம்பெயர்ந்த பறவைகளின் மிகப்பெரிய குளிர்கால சரணாலயமாகும். இந்த ஏரி அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்குகளின் தாயகமாக உள்ளது.
சில்கா ஏரி பெரிய மீன் வளங்களுடன் உள்ளதால். கடற்கரையிலும் தீவுகளிலும் உள்ள 132 கிராமங்களில் வசிக்கும் 150,000 க்கும் அதிகமான மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது
சில்கா ஏரி 160 க்கும் அதிகமான பறவையினங்களைக் கொண்டிருக்கிறது. காஸ்பியன் கடல், பைக்கால், ஆரல் கடல் மற்றும் மங்கோலியா, மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் கிர்கிஸ் ஸ்டெப்கள், லடாக் மற்றும் இமயமலைகள் ஆகியவற்றிலிருந்து வருகின்ற இந்த புலம்பெயர்ந்த பறவைகள் , சில்கா ஏரியை சென்றடைய12,000 கிமீ வரைக்கும் கடந்து செல்கின்றன;
1981 ஆம் ஆண்டில் ராம்சார் மாநாடு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த முதல் இந்திய ஈரநிலமாக சில்கா ஏரியை அறிவித்தது.
ஒரு ஆய்வின் படி சில்கா ஏரியில் வசிக்கும் பறவைகளில் 45 சதவிகிதம் இந்த பிராந்தியத்திற்கு உட்பட்டவை, 32 சதவிகிதம் நீர்வாழ்பறவைகள் , 23 சதவிகிதம் நீரில் நடக்கும் பறவை வகை. 14 வகையானவை வேட்டைப் பறவைகளை கொண்டுள்ளது. இங்கு சுமார் 152 அரிதான மற்றும் ஆபத்தான டால்பின்களும் உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
-
கொரோனா பாதிப்பு களைய முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதி அளிக்க நமது சங்க வங்கி கணக்கில் நிதி அளித்தலர் விபரம்: 1. K.கோபி. 1000 ...
-
அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச் சங்கம். புதுச்சேரி மாவட்டம் தோழர்களே, புதுவை மாவட்ட சங்கத்தின் சார்பில் ஒய்வுதியர் தின சிறப்பு கூ...
-
தோழர்களே நமது மாவட்ட சங்கத்தின் வேண்டுகோளின் படி நமது ஒப்பந்த தோழர் மறைந்த திரு ஆனந்த் அவர்களின் குடும்பத்திற்காக மனம் உகந்து கொடுத்த தொக...
அருமையான, தேவையான தகவல்கள். பூரி மாநாட்டிற்குச் செல்பவர்கள், காணவேண்டிய இடங்கள் குறித்த பதிவுகள், நன்று! வாழ்த்துகள்!
ReplyDelete