Friday, August 10, 2018

தமிழ் மாநில மாநாடு திருச்சி

தமிழ் மாநில மாநாடு திருச்சி

மலைக் கோட்டை நகராம் திருச்சி மாநகரில் வெகு சிறப்பாய் ,7-8-2018 ,8-8-2018 இருதினங்களிலும்  திருச்சி மாவட்ட அன்பர்களால் ( AIBSNLPWA ) நடத்தபட்ட 6 வது தமிழ் மாநில மாநாட்டிற்கு, தமிழகத்தின் பிற மாவட்டங்களி லிருந்து சுமார்400+ க்கு மேற்றப்பட்ட (டெலிகேட் கள் மற்றும் பார்வையாளர்கள் )
தோழர்கள் அனைவரும் மகிழும்  வகையில் சிறப்பான தங்கும் அறை வசதிகள்,
அறுசுவை உணவு வசதிகள்,மருத்துவ வசதிகள் ,போக்கு வ்
ரத்து வசதிகள்  எல்லவற்றையும் செய்தது மிகவும் பாராடடத்தக்கது.

வரவேற்பு குழுவினரின் அர்ப்பணிப்பும், சேவை மனப்பான்மையும் போற்றுதலுக்குரியது. இவர்களை ஒருங்கிணைத்து இந்த வெற்றி மாநாட்டின் சிறப்புக்கு வித்திடட  தோழர்காத்தபெருமாள்  மற்றும் தோழர் செல்வராஜ் ஆகியோரின்  ஓய்வறியாப் பணியும்  காரணம் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
*******
சங்க கால புற நானுற்று பாடலில் சொல்லியது போல்
பசி நோக்கார்
கண் துஞ்சார்
மெய்வருத்தம் பாரார்
இமைப் பொழுதும் சோராதிருப்பார்.
என் கடன் பணி செய்து கிடப்பதே!
******
குறைந்த நிதி வசதியில் இந்த பிரமாண்டத்தினை செய்து சிறப்பு செய்துள்ளார்கள்.
கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் திடீர் மறைவு அதன் பின்னர் வந்த அரசு பொது விடுமுறை போன்ற திடீர்நிகழ்வுகளை வெகு திறமையாய் கையாண்டு ,அகில இந்திய தலைவர் தோழர் ராமன் குட்டி,உதவி தலைவர் DG, செயலர் தோழர் நடராஜ்ன் மற்றும் மாநில சங்கநிர்வகிகளால் பாராட்டு பெற்ற வரவேற்பு குளுவின ர் அனைவரையும் மனாதார, வாயார  பாராட்டி மகிழ்வோம்.

குறிப்பாய் புரட்சிதலைவர்  எம்ஜிஆரப்போன்று  வசீகர முகம்,புன்னகை,பிறரைக் கவரும்   காந்தப் பேச்சு கொண்ட நல்லவர் ,மருத்துவர் திரு செந்தில் குமார் அவர்களின்" இதயம் காப்போம்" எனும்  காணொளி நிகழ்வும் அது தொடர்பான மருத்துவரின் விளக்கமும்  மிகவும் முத்தாய்யப்பானது.
இந்த மாநாடு தொடர் பாய் நிகழ்த்தபட் ட கண்காட்சி யில். வைக்கப்படட  சங்கத்தின் சாத்னைகள்,புகைப்படங்கள்,முக்கிய ஆணைகள் ,வெளிவரும் பல வகை சங்க பத்திரிக்கைகள் பார்த்தவர் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.மதுரை,
மற்றும் நெல்லை தனி அரங்கு அமைத்திருந்தனர்.
கோவை,தஞ்சை,பாண்டி, இன்னும் சில மாவட்டங்களின் பங்கெளிப்பு சிறப்புடையது .
கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் அகில இந்திய சங்கத்தின்  தலைவர்களின் சிறப்பு பரப்புரை தந்த  எல்லா செய்திகளும் தெளிவாய் புரியும் வகையில் இருந்தது இங்கு குறிப்பிடத் தக் கது.குறிப்பாக , மத்திய அரசு பணியாளருக்கான 7வது சம்ப்ளக் கு ளு வின் பரிந்துரையின் படி பி எஸ் என் எல் லிருந்து  ஓய்வு பெற்று மத்திய  அரசு பென்ஷன் பெறு வோரின் பென்ஷன்1.1.2017 முதல்  உயர்த்தி(மொத்த பணப்பலன் இப்போது வாங்கும் பென்ஷனில் உத்தேசமாய்14.5 சதம் கூடுதலாய் தரப் படவேண்டும் என்பதற்கு அடிப்படை காரணங்களை விளக்கிய தலைவர் P SR ,உப தலைவர் DG, செயலர் GN ஆகியோரது சிறப்பு பேச்சு அனைவரின் மனதில் நம்பிக்கை விதை தூவி சென்றுள்ளது.
வெற்றி மாநாட்டில் பங்கு பெற்ற அனைத்து தோழர் சிந்தையிலும்,இப்போது நிலவும் பென்ஷனர்  பிரச்சனைகள் ,
எதிர் காலத்தில் வரும் அனைத்து பென்ஷனர் பிரச்சனைகளையும்திறமையாய் கையாண்டு நியாயம் (உரிய பலன் கள்) பெற்று தரும் வலிமை கொண்ட இயக்கம் நமது AIBSNLPWA என்பதும் வரலாறு சொல்லும் உண்மை.

No comments:

Post a Comment

 தோழர்களே, அனைத்திந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கத்தின் புதுச்சேரி மாவட்டத்தின் சார்பில் இன்று  21.12.2023 ஓய்வூதியர் தினம் மிகச் ...