Sunday, October 14, 2018

( ஜூலை -2018 முதல் செப்டம்பர் - 2018) செயல்பாட்டறிக்கை

அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச் சங்கம் புதுச்சேரி மாவட்டம் செயல்பாட்டறிக்கை


 அன்பு நண்பர்களே! வணக்கம்.
 நமது அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச் சங்க புதுச்சேரி மாவட்டச் சங்கத்தின் மூன்று மாதத்திற்கான ( ஜூலை -2018 முதல் செப்டம்பர் - 2018) வரையிலான செயல்பாட்டறிக்கையினை தங்களின் பார்வைக்கு சமர்பிக்கிறேன்.

 அஞ்சலி: கடந்த மூன்று மாதங்களில், கலைஞர் மு.கருணாநிதி, அட்டல் பிகாரி வாஜ்பாய், புத்ததேவ் பட்டச்சார்யா, நமது தோழர்கள் திரு.R.மோகன்ராஜ், A.சாமிநாதன். முகமது அனிஃபா அவர்களின் தாயார் ஆகியோர் மறைவுக்கு நமது அஞ்சலியை உரித்தாக்கினோம்.

 சங்க செயல்பாடு: தர்ணா: 18-07-2018 அன்று பென்சன் மாற்றம் கோரி அகில இந்திய சங்க அறைகூவலின்படி தர்ணா நடந்தது. தர்ணா முடிவில் பிரதமர் மற்றும் பென்சனர் நலத்துறை அமைச்சருக்கும் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. நமது சங்க கடிதத்திற்கு ஒப்புகை பதில் கடிதம் அமைச்சரின் அலுவலகத்திலிருந்து நமக்கு அனுப்பியுள்ளது.

 மாதாந்திரக் கூட்டங்கள்: ஜூலை, ஆகஸ்டு, மற்றும் செப்டம்பர் மாதாந்திரக் கூட்டங்கள் நடந்தது.

 மாநில மாநாடு : திருச்சியில் ஆகஸ்டு- 7-ல் நடந்த மாநில மாநாட்டில் 10 பிரதிநிதிகள் மற்றும் 8 பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். திரு. V.ராமராவ், திரு.R.வெங்கடாசலம், திரு. S. காளிதாசன், ஆகியோர் முறையே மாநிலத் தலைவர், மாநிலச் செயலர், பொருளாளர் ஆக தேர்வுபெற்றனர். நமது மாவட்டத்தைச் சேர்ந்த திரு..M.சாம்பசிவம் மாநில அமைப்புச் செயலராக தேர்வு செய்யப்பட்டார்.

  அகில இந்திய மாநாடு : செப்டம்பர் 22, 23 தேதிகளில் ஒரிசா மாநிலம் பூரி நகரத்தில் நடந்தது. நமது மாவட்டத்தின் சார்பில் 4 பிரதிநிதிகள் 4, பார்வையாளர்கள் தேர்வுசெய்தபடி கலந்துகொண்டனர். மேலும் 10 பார்வையாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

  வெள்ள நிவாரண நிதி: கேரள வெள்ள நிவாரண நிதியாக நமது மாவட்டத்திலிருந்து ரூ.14300/- அனுப்பப்பட்டது.

 KYP பென்ஷன் மாற்ற படிவம்: நமது உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்களை முதல் தவணையாக 192 படிவங்கள் சென்னையில் 18-09-2018 அன்று CCA அலுவலகத்தில் தரப்பட்டது.

வருமானவரி செலுத்தல்: வருமான வரி படிவத்தை கணனியில் உறுப்பினர்களுக்கு அனுப்ப தலைவர் திரு. K.R.சிவகுமார், NIB பிரிவில் திரு. ராமகிருஷ்ணன் ஆகியோர் உதவி செய்தனர்.

 G.M அவர்கள் நமது கோரிக்கையில் அக்கறை காட்டாதது: பொதுக்குழுவின் முடிவின்படி CGM அவர்களுக்கு கடிதமும், மாநிலச் செயலருக்கு அக்கடித நகலையும் அனுப்பினோம். மாநில நிர்வாகத்தில் பென்சனர் குறைதீர்வுக்கென உள்ள அதிகாரிக்கும் CGM-க்கு அனுப்பிய கடிதத்தை அனுப்பினோம். தற்போது GM, புதுச்சேரிக்கு அவரிடமிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 அதாலத்: சென்னையில் 18-09-2018 அன்று நடந்த அதாலத் கூட்டத்தில் மாவட்டச் செயலர் கலந்துகொண்டார். நமது மாவட்டச் சங்கத்தால் கொடுக்கப்பட்ட 13 பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டது. 10 பிரச்சனைகள் தீர்வு காணப்பட்டது: 1. திருமதி, R. முனியம்மாள் அவர்களின் பென்சன் குறைவு சரி செய்ய ஓப்புகொள்ளப்பட்டது 2. திருமதி.பாலாமணி பிரபாகரன் அவர்களின் 78.2% IDA உத்தரவு HPO—வுக்கு அனுப்பப்படுகிறது. 3. திருமதி.B.மாலா அவர்களுக்கு கிராஜுவட்டி உச்சரவரம்பால் தரவேண்டிய மிகுதிப் பணம் பெற்றுத்தரப்பட்டது. 4. திரு.P.ஏசுதாஸ் பேட்ரிக் அவர்களுக்கு திருப்பித்தரவேண்டிய கிராஜுவட்டி பணம் திருப்பித்தரப்பட்டது. 5. திரு. S. சுந்தரம், திரு.P. நாராயணன், திரு.K.ராமநாதன், திருமதி.P. காசிராஜன், திரு. R.S.ராஜேந்திரன், திரு.V.முத்தையா ஆகியோரின் 3% இன்கிரிமென்ட், கமூட்டேசன் பெற்றுத்தரப்பட்டது. 6. திரு.P. சீத்தாராமன், அவர்களின் மனைவி பெயரை பென்சன் புத்தகத்தில் சேர்க்கப் பட்டது. 7. திரு.P. சீத்தாராமன், அவர்களின் முகவரி மாற்றம் உத்தரவிடப்பட்டது. 8. திரு.T. ராமகிருஷ்ணன், அவர்களுக்கு பென்சன் உத்தரவிடப்பட்டுள்ளது. 9. திரு. N.பால்ராஜ் அவர்களின் 78.2% IDA பிரச்சனை தீர்வுகாணப்பட்டது. 10.திரு.D. மனோகரன் அவர்களின் பென்சன் உத்தரவு கிடைக்கப்பட்டது.

  தீர்வுகாணவேண்டிய பிரச்சனைகள்: 1. திருமதி லட்சுமி க/பெ முத்துலிங்கம் பென்சன் பிரச்சனை 2. திரு.K. முருகன் அவர்களின் பென்சன் புத்தகத்தில் மகன் பெயரை சேர்த்தல் 3. திரு.A.H. முகமது நாசர் அவர்களின் பிரச்சனை CGM அலுவலகத்தில் GM (udaan) அவர்களிடம் பேசப்பட்டுள்ளது.

  பென்சனர் குறைதீர்வுக் குழு கூட்டம்: 17-05-2018 அன்று நடந்தது. அதில் பழைய பிரச்சனைகளையும், புதியதாக தரப்பட்ட பிரச்சனைகளையும் விவாதித்தோம். கீழ்கண்ட பிரச்சனைகள் தீர்வு காணப்பட்டது: 1.ஓய்வூதியர்களுக்கு தரமான அடையாள அட்டை தற்போது நிரந்தர ஊழியர்களுக்கு தரப்பட்டு வருகிறது. ஓய்வூதியர்களிடம் படிவங்கள் பெறப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் தரப்படும். 2. மறைந்த தோழர் சதாநிதம் அவர்களுக்கு முழு DCRG தரப்படுவதற்கு பதில் குறைத்து கொடுத்ததை மாநில நிர்வாகத்திடம் மாநிலச் சங்கம் பேசியதை அடுத்து ஒன்றரை லட்சம் பெற்றுத் தரப்பட்டது. 3. பென்சனர் குறை தீர்வுக் கூட்ட மினிட்ஸ் தரப்படுவதில் உள்ள காலதாமதத்தை சுட்டிக்காட்டியதன் பேரில் காலதாமதம் வரும் காலங்களில் தவிர்க்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. 4. 2017 ஏப்ரல் முதல் மார்ச்-2018 வரையில் ஓய்வு பெற்றவர்களுக்கு மெடிக்கல் பில் கட்டணம் பெற, அல்லது மெடிக்கல் அலவன்சு பெற விருப்பம் பெறப்படும். 5. ஓய்வூதியர்களுக்கு வென்டர் எண் உருவாக்காததால் மெடிக்கல் பணம் பட்டுவாடா ஆகாமல் இருந்ததை கணக்காதிரியின் கவனத்திற்கு கொண்டுவந்ததின் அடிப்பட்டையில் 30 பேருக்கு வென்டர் எண் உருவாக்கப்பட்டது. 6. VRS-ல் சென்ற திருமதி.R.மல்லீஸ்வரி, T.R.ராஜி, M..உஷா, டூப்ளக்ஸ் பரந்தாமன், மனோகரன், ஆகியோரின் பென்சன் உத்தரவு பெற மாநில நிர்வாகத்தை வலியுறுத்தியதன் பேரில் அவை கிடைத்துள்ளது

 சங்க அமைப்பு நிலை: இந்த மூன்று மாதங்களில் 29 பேர் தங்களை ஆயுள் சந்தா உறுப்பினராக இணைத்துக்கொண்டுள்ளனர். தற்போது ஆயுள்சந்தா உறுப்பினர் சேர்ப்பு 270 ஆனது நமது மாவட்டச் சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுப்பினர்களின் பங்களிப்பு எப்போதும் போல் தொடர வேண்டுகிறோம். இவண் த. அன்பழகன் மாவட்டச் செயலர். புதுச்சேரி 13-10-2018

No comments:

Post a Comment