Sunday, December 9, 2018
புதுச்சேரி மாதாந்திர பொதுக்குழு கூட்டம்
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மாதாந்திரபொதுக்குழு கூட்டம் நடப்பதுபோல இம்மாதமும்
08-12-2018 அன்றுகூட்டம் நடந்தது. தலைவர் திரு.K.R.சிவகுமார் தலைமை தாங்கினார். 73 பேர் கலந்துகொண்டனர். 29-11-2018 அன்று நடந்த செயற்குழு கூட்ட முடிவுகள் பற்றி செயலர்அன்பழகன் விவரித்துப் பேசினார். மற்ற சங்கங்கள் இணைந்தகாலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு நமது சங்கம் ஆதரவுதெரிவிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
29-12-2018 அன்று நடக்கவுள்ளபென்சனர் தின விழா சிறப்பாக நடத்திட ஒவ்வொருவரும் ஒருபொறுப்பை ஏற்றுக்கொண்டனர். கெஜா புயல் பாதிப்பு நிவாரண உதவிகோரி நன்கொடைகேட்கப்பட்டது. ஊறுப்பினர்கள் நன்கொடை வழங்கினர். சிலதினங்களில் மாநிலச் சங்கத்திற்கு அனுப்பிவிக்கபடும். வழக்கம்போல இரண்டாவது சனிக்கிழமையில் மனமகிழ்மன்றத்தில்கூட்டம் நடத்திடுவதுபோல இன்றைக்கு நடத்திட DGM (CFA) அவர்களின்வாய்மொழி உத்தரவின்பேரில் நேற்று மறுக்கப்பட்டது. 2017 முதல்இரண்டாவது சனிக்கிழமை மனமகிழ் மன்றத்தில் கூட்டம்நடத்திக்கொள்ள அப்போதைய
P.G.M திரு. மார்ஷல் ஆண்டனி லியொஅனுமதி தந்து அதற்காக ரூ.100/- ஐ கட்டி, பிறகு
GST வரியை சேர்த்துரூ.118/-ஐ கட்டி கூட்டம் நடத்தி வரும் வேலையில் திடீரென மறுப்பதும்,அதுவும் வாய்மொழிமூலம் மறுப்பதும் நியாயம் இல்லை. இதைDGM(CFA)-
விடம், தலைவர், மாநில அமைப்புச் செயலர், மாவட்டநிர்வாகிகள், மற்றும்
NFTE மாவட்டத்தலைவர் ஆகியோர் இது பற்றிகேட்டனர். சரியான பதில் இல்லை. ரொம்ப ர்ப்பாக பேசி முடியாதுஎன்றார். G.M அவர்களை சந்திக்க நேரம் கேட்டோம். கிடைக்கவில்லை.கடைசியாக அருகிலுள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் இடம் கேட்டுகூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட பலர்நிர்வாகத்தின் போக்கை கண்டித்து பேசினர். முடிவில் மாநிலச்செயலரின் ஆலோசனைப்படி நடப்பது என்று முடிவு செய்யப்பட்டது.பொருளாளர் திரு.R.லோகநாதன் நன்றி கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
-
கொரோனா பாதிப்பு களைய முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதி அளிக்க நமது சங்க வங்கி கணக்கில் நிதி அளித்தலர் விபரம்: 1. K.கோபி. 1000 ...
-
அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச் சங்கம். புதுச்சேரி மாவட்டம் தோழர்களே, புதுவை மாவட்ட சங்கத்தின் சார்பில் ஒய்வுதியர் தின சிறப்பு கூ...
-
தோழர்களே நமது மாவட்ட சங்கத்தின் வேண்டுகோளின் படி நமது ஒப்பந்த தோழர் மறைந்த திரு ஆனந்த் அவர்களின் குடும்பத்திற்காக மனம் உகந்து கொடுத்த தொக...
No comments:
Post a Comment