Friday, August 16, 2019

BSNL / MTNL ஓய்வூதியர்களே, உங்களின் நண்பர்களை தேடுங்கள்


தாங்கள் சார்ந்திருக்கின்ற இயக்கத்திற்கு அப்பாற்பட்டு, யார் சரியானவர்கள், யார் ஓய்வூதியர்களின் நலனைப் பாதுகாக்க உள்ளவர்கள் என்பதை ஓய்வூதியர்கள் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
      பென்சன் மாற்றத்தில் 2007-ல் நமக்கு ஏற்பட்ட அனுபவத்தை பின்னோக்கிப் பார்ப்போமானால், பென்சன் மாற்றத்திற்கு ஒரு நிரந்தர தீர்வு காண, BSNL IDA பென்சனர்களுக்கு 7-வது மத்திய சம்பளக் குழு பரிந்துறைத்த பிட்மெண்ட் படி பென்சன் மாற்றத்தை நாம் கோரினோம். நாம் இந்த விசயத்தில் நமது நிலைபாட்டில் உறுதியாக உள்ளோம்.. அதைப்போல, மற்ற ஓய்வூதியர் சங்கங்களும் அவர்களின் புரிதல்படி அவர்களின் கோரிக்கையை வைக்க உரிமையுண்டு. பென்சனர் கூட்டமைப்பில்   AIBSNLPWA-வைத் தவிர்த்து அதில் உள்ள சங்கங்கள் ஆரம்பத்தில் 3-வது சம்பளக்குழு பரிந்துரைத்த அடிப்படையில் பென்சன் மாற்றம் 15 சதவீத அளவில் அதிகாரிகளுக்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். 7-வது சம்பளக்குழு பரிந்துரையில் உள்ள பிட்மெண்ட் காரணியை  பிறகு தான் புரிந்துகொண்டார்கள். பென்சனர்களின் நலத்திற்கு மட்டுமே தாங்கள் பாடுபட வேண்டிய உண்மைத் தன்மையை, அவசியத்தை அவர்கள் உணர்ந்தார்கள்..  தற்போது கூட்டமைப்பில் உள்ள எட்டு சங்கங்களும் பென்சன் மாற்றத்தில் ஒத்த கருத்தை உடையவர்களாக உள்ளனர். நாம் இந்த கோரிக்கையில் அனைவரும் இணைந்தும், கூட்டாகவும் செயல்பட்டு வருகிறோம்.  இந்த கூட்டு பேர சக்தியை அதிகரிக்க எண்ணி, மற்ற 3 சங்கங்களையும் இணைந்து செயல்பட அழைத்தோம். AIBSNLREA இதற்கு செவி சாய்க்காமல் மெளனமாக இருந்தார்கள். AIBDPA ( நம்பூதிரி சங்க இணைப்பு ) தங்களுக்கு நம்முடைய மின்னஞ்சல் கிடைக்கவில்லை என்றார்கள். 10 நாட்கள் கழித்தும் அந்த மின்னஞ்சல் பட்டுவாடா ஆகவில்லை என்ற தகவல் வரவில்லை. ஆனால், நம்முடைய முன்மொழிதலை பார்த்திருக்கிறார்கள். நல்லது.  அவர்களுடைய வெப்சைட்டில் 07-08-2019 அன்று இப்பிரச்சனையைப் பற்றி தெரிவித்திருக்கின்றனர் :

அவர்களின் கடிதத்தில் 2-வது பத்தியில், “ சம்பளமாற்றத்துடன் இணைக்காமல் 01-01-2007 முதல் பென்சன் மாற்றத்தை 15% பிட்மெண்ட்படி தரவேண்டும் என கோரியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். மத்திய பொதுத்துறை நிறுவன அதிகாரிகளுடைய சம்பள மாற்றத்தை 2-வது சம்பள மாற்றக்குழு பரிந்துரைத்த 30% பிட்மெண்ட்படி   IDA அளவீட்டில் 01-01-2007 முதல் பென்சன் மாற்றத்தை பெற்றோம். ஒவ்வொரு சம்பள மாற்றத்தின் போதும் எதிர்வரும் பென்சன் மாற்றத்தை சம்பளக்குழு பரிந்துரைத்த அதிகபட்ச பிட்மென்ட்டைப் பெற, இதை ஒரு முன்னுதாரமாக உருவாக்கியுள்ளோம்”.

இந்த முன்னுதாரணத்தை குறிப்பிட்டால், அடுத்த சம்பள மாற்றம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். மேலும் சம்பள மாற்றத்தோடு இணைக்கக்கூடாது என்று கேட்க முடியாது. 01-10-2000 முதல் 31-12-2016 வரையிலான காலத்தில் ஓய்வுபெற்ற BSNL IDA  பென்சர்களின் பென்சன் மாற்றப் பிரச்சனை  BSNL-ன் சம்பளமாற்றத்தை ஒட்டியே  01-01-2007 முதல்  தர பரிசீலனையில் உள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது (15-03-2011 தேதியிட்ட DOT உத்தரவின்,  பத்தி- 2-ல் 01-01-2007 முதல் பென்சன் மாற்றம் செய்ய வெளியிடப்பட்ட உத்தரவு)
பத்தி-4.ல் அவர்கள் சொல்வது “ 01-01-2016 முதல் CDA சம்பள விகிதத்தில் பென்சன் பெறவும், பிறகு வரும் பஞ்சப்படியை CDA–வாக பெறவும் வழிமுறை செய்ய ஒரு மாற்றல் கொள்கை உருவாக்கப்படவேண்டும். அவ்வாறான ஒரு கோரிக்கையை எழுப்புவது தற்கொலைக்கு சமம், மற்றும் பென்சனர்கள் நலனுக்கு குந்தகமாக அமையும் “

01-01-2016 முதல் CDA சம்பள விகிதத்தில் பென்சனை நாம் கோரவில்லை. தற்போதைய IDA அடிப்படை பென்சனை 01-01-2016 முதல் CDA பென்சனாக மாற்றவேண்டும் என்பதே நமது திட்டம். இந்த மாற்றம் CDA சம்பள விகிதத்தில் கோரவில்லை. இரண்டும் வெவ்வேறானது. நம்முடைய முன்மொழிதல் எந்த வகையில் பென்சனர் நலனுக்கு குந்தகம் எனவும் விளக்கப்படவில்லை.
பத்தி-6.ல் அவர்கள் சொல்வது:  “ எதிர்காலத்தில் சம்பள மாற்றம் என்று இருக்கப்போவதில்லை என்ற காரணத்தைக் காட்டி CDA பென்சன் மாற்றம் கோருவதான வாதம் சரியல்ல “

    எதிர்காலத்தில் சம்பள மாற்றக்குழு இருக்காது என நாம் சொல்லவில்லை.  2027-வாக்கில், BSNL-ல் இணைந்த ஊழியர்கள் அனைவரும் ஓய்வுபெற்றுவிடுவார்கள். அதனையொட்டியே 2027-ல் BSNL-ல் சம்பள மாற்றம் என்பது பொருத்தமற்றதாகிவிடும், அதன் காரணமாக பென்சன் மாற்றம் சம்பளமாற்றத்தோடு இணைத்தல் தேவையில்லாததாகிவிடும். அவர்களின் கூற்று உண்மையை திரித்து கூறுவதாகும். அவர்களுடைய சங்கத்தைச் சார்ந்த சிலரை குழப்பலாம், மற்றவர்களை குழப்ப முடியாது.

பத்தி-7.ல் அவர்கள் சொல்வது:   “அடிப்படை கோரிக்கையான பென்சன் மாற்றத்திற்கு தீர்வு காண, சிக்கலான இந்த காலகட்டத்தில் இந்த கோரிக்கையின் மீது எவ்வளவு போராட்டங்களை சங்கங்கள் நடத்தியது என்பதை நினைவுபடுத்துகிறோம்.  AUAB–ன் 3 நாள் வேலைநிறுத்தம், தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தியதால் சம்பள மாற்றத்திலிருந்து பென்சன் மாற்றம் என்பதை இணைக்கக்கூடாது என்ற நிலைபாட்டை அரசு எடுத்தது “
சம்பள மாற்றத்திலிருந்து பென்சன் மாற்றம் என்பதை மாற்ற அரசு முடிவு செய்யவில்லை என்பதே இப்பிரச்சனையின் உண்மையாகும். கடந்த    03-12-2018 அன்று துறை அமைச்சர் மனோஜ் சின்காவை AUAB சந்தித்தது. அந்த கூட்டத்தில் இணைப்புதன்மை இல்லாத இப்பிரச்சனையை ஒப்புதலுக்காக பென்சனர் மற்றும் பென்சனர் நலத்துறைக்கு ஏற்கனவே அனுப்பிவிட்டதாக DOT அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பிரச்சனையை துரிதப்படுத்தும்படி அதிகாரிகளை அமைச்சர் வலியுறுத்தினார்.  இந்த கோப்பு இன்னும்  DOT- க்கும் & பென்சனர் நலத்துறைக்கும் இடையே இந்த இணைப்பு தேவையில்லை விசயத்தில், யார், எந்த துறை முடிவெடுப்பது என்ற முடிவில்லாமல் கோப்புகள் போகிறது , வருகிறது, செல்கிறது என்ற நிலையில்தான் உள்ளது. 

அழையாத அலோசகரிடமிருந்து அமைச்சருக்கு மோசமான கடிதம்:

“ BSNL பென்சனருக்கு பென்சன் மாற்றத்தை 01-01-2017 முதல் 3-வது சம்பளக் கமிசன் பரிந்துரையின்படி மாற்றம் செய்ய, ( BDPA,  FNTO  சார்பு சங்கம்) பொதுச் செயலர் திரு.D.D.மிஸ்டிரி, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு 06-07-2019 அன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் 22 பத்திகள் கொண்டுள்ளது. அதை அச் சங்கத்தின் வெப்சைட்டிலும், இதழிலும் வெளியிட்டது. அவர்களின் கோரிக்கையை  நியாயப்படுத்தும் வகையில் எழுதாமல், 7-வது   சம்பளக் கமிசன் பரிந்துரைபடி பிட்மெண்ட் செய்ய நாம் கோரியதை கடிதம் முழுக்க நம்மை சாடியிருக்கிறார்.  அக்கடிதத்தின் உள்ளே உள்ள தட்டச்சு பிழைகள், சரியான நிலைபாடின்மை ஆகியவற்றைப் பற்றி குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், அக்கடிதத்தின் நஞ்சுத் தன்மையை விவரிக்காமல் இருக்க முடியாது.
அக்கடிதத்தின் பத்தி-2 : “ அனைத்து கட்சி அரசியலையும் தவிர்த்தும் கம்யூனிஸ்ட் சங்கங்கங்களை அழைத்து கூட்டம் நடத்தாமல், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சரின் ( திரு.பிரல்காத் ஜோஷிஜி) சிபாரிசின் பேரில் கடந்த 01-07-2019 அன்று பென்சனர் சங்கத்தை (  AIBSNLPWA / CBMPA   ) அழைத்து அதிக நேரம் தங்களுடைய பொன்னான நேரத்தை செலவழித்திருக்கிறீர்கள் “.

அக்கடிதத்தின் பத்தி-4. : ” இவ்விசயத்தில் 7-வது மத்திய சம்பளக் கமிசன் பரிந்துறைப்படி 01-01-2017 முதல் பென்சன் மாற்றத்திற்கு பல பொருத்தமற்ற தகவல்களை தந்து நியாயப்படுத்தியதை தங்களுடைய பார்வைக்கு கொண்டு வருகிறோம் “.

அக்கடிதத்தின் பத்தி- 15:   “ தங்களூடைய அரசியல் ரீதியிலான உந்துதலால், சங்கங்கள் சம்பள மாற்ற பேச்சுவார்தையை தடுத்து நிறுத்தி அதற்கு முற்றுப் புள்ளி வைத்தனர்”.

அக்கடிதத்தின் பத்தி- 16:  ” சம்பள மாற்ற பேச்சுவார்த்தையை மறுபடியும் துவக்க கோராமல். இந்த சங்கம் ( AIBSNLPWA ), 7-வது மத்திய சம்பளக் கமிசன் பரிந்துறைப்படி பென்சன் மாற்றக் கோரிக்கையை தன்னுடைய பத்தி-10 மூலம் வலியுறுத்தியது.  இக்கோரிக்கை எதார்த்தமானது அல்ல என்பதை நாங்கள் திடமாக நம்புகிறோம்.”

சம்பள பேச்சுவார்த்தை சேவையில் உள்ள சங்கங்களின் உரிமையான ஒன்று;     அதில் எங்களது பங்கு ஒன்றுமில்லை;

துறை அமைச்சர் அவர்களுக்கு நாம் எழுதிய கடிதத்தின் பத்திகள் -11, 12, 15,16 ஆகியவைகளை குறிப்பிட்டு சம்பந்தமில்லாதவைகளை பேசுகிறார்  --    மிஸ்டிரி.  மேலும் நம்முடைய கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டாம் என துறை அமைச்சரை கேட்டுள்ளார். அவர்களின் எழுத்துக்களுக்கு எந்த பதிலும் தர வேண்டியதில்லை, அதை இகழ்ச்சியாகவே கருதுவோம்.
தங்களுடைய சங்கம்  (BDPA (FNTO) சரியான பாதையில் அழைத்துச் செல்கிறதா என்பதை அச்சங்க உறுப்பினர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். அனைத்து வகையான நிறங்கள், அரசியல் பார்வைகள் கொண்ட உறுப்பினர்களின் அமைப்பாக  AIBSNLPWA விளங்குகிறது.  இதே தோழர்,   மிஸ்டிரி ஆரம்ப கட்டத்தில் இச் சங்கத்தில் இணைந்திருந்தார். அதிலிருந்து தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக நமது சங்கத்திலிருந்து விலகினார்.
கம்யுனிச கொள்கையுடைய  BSNLEU, NFTE-BSNL தலைவர்களை சந்திக்க கூடாது என அமைச்சர்களுக்கு ஆலோசனை தருவாரா இந்த மிஸ்டிரி ?

அழைக்கப்படாத, கேட்காமல் ஆலோசனைகளை தருபவர், அமைச்சர்களுக்கும் அல்லது இந்திய பிரதமருக்கும், அல்லது ரஷ்ய பிரதமருக்கும் அல்லது அமெரிக்க சனாதிபதிக்குக் கூட அள்ளி வீசுவார் ஆலோசனைகளை!  யார் அவைகளை தடுக்க முடியும் ?

                                                                     =  P.S. ராமன் குட்டி, அகில இந்தியத் தலைவர்


தமிழாக்கம்:   த.அன்பழகன், மாவட்டச் செயலர், புதுச்சேரி



No comments:

Post a Comment