Sunday, April 19, 2020

வருமான வரி சம்பந்தமான செய்திகள்:


---------'-''---------'-'''----'-------'------SAMPANN பென்சனர்கள் எனும்போது பிப்ரவரி-2019- லிருந்து CCA  மூலம் பென்சன் பெறுபவர்கள் மற்றும்  VRS-2019 மூலம் ஓய்வுபெற்றவர்கள் ஆகியோர் வருமான வரிக்கான விருப்பம், மெயில் மூலமாக தெரிவிக்க 25-04-2020   கடைசி தேதி. அந்த விருப்ப படிவத்தில் PPO  எண் என்ற இடத்தில்= உங்களுடைய HR  எண்ணை எழுதி-   PPO  Not issued என எழுதிவிடுங்கள்.

 Option ( விருப்பம்) எனும்போது, 10  லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் Option 1 அல்லது தற்போதைய அளவீடு ( Existing Rate) என்பதை கணக்கில் கொள்ளுங்கள்.
10 லட்சம் மேல் வருமானம் என்றால் Option 2 அல்லது புதிய அளவீடு என்பதை கணக்கில் கொள்ளவேண்டும்.

பிப்ரவரி-2019- க்கு முன்பாக ஓய்வுபெற்று பென்சன் வாங்குபவர்களுக்கும் இந்த அளவீடு பொருந்தும். அவர்கள் வழக்கம் போல வருமான வரி கட்டும் காலத்திலும், கட்டும் வங்கிகளிலும் Form-16 முலம் வரி கட்டவேண்டும்.

வருமான வரி தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வரலாம். அதன்படி நடந்துகொள்ளுங்கள்.

 VRS-2019 மூலம் ஓய்வுபெற்றவர்களுக்கு   PPO உத்தரவு இன்னும் பலருக்கு வெளியிடவில்லை. ஊரடங்கு சட்டத்தினால் பென்சன் அலுவலகம் மூடப்பட்டது.
இம்மாதம்   போடவேண்டிய பென்சன் உத்தரவு, பட்டுவாடா வேலைகள் செய்யவேண்டி உள்ளதால், நமது சங்கம் வலியுறுத்தியதன் பேரில், தற்போது 1 AO, 5 ஊழியர்களைக்கொண்டு பென்சன் அலுவலகம் 16-ந் தேதி முதல் மேற்கண்ட வேலைகளை மட்டும் செய்யும். மற்ற வேலைகளை ஊரடங்கு விலக்கியபிறகு செய்வதாக உள்ளனர்.
= த.அன்பழகன், மாவட்டச் செயலர்

No comments:

Post a Comment