புதுச்சேரியில் பென்சனர் தினத்தை ஒட்டி சங்க கொடியை மாவட்ட உதவித் தலைவர் தோழர். M.V.ராமகிருஷ்ணன் ஏற்றிவைத்தார். மாவட்டச் செயலர் த.அன்பழகன் கோஷம் எழுப்பினார். NFTE தமிழ்மாநில தலைவரும்,சம்மேளன பொறுப்பாளருமான தோழர். P. காமராஜ் உரையாற்றினார். நமது மாநில அமைப்புச் செயலர் திரு. M.சாம்பசிவம், உரையாற்றினார். மூத்த தோழர். N.பட்டாபி வாழ்த்து கோஷம் எழுப்பினார். பென்சனர் தின வரலாறு பற்றி மாவட்டச் செயலர் த.அன்பழகன் குறிப்புகள் அடங்கிய அறிக்கையை விநியோகித்தார். தோழர்.G.சீனிவாசன். அவர்கள் இனிப்பு வழங்கினார். தோழர். A.நாராயண சாமி, தேநீர் செலவை ஏற்றார். நேற்று இரவிலிருந்து காலை 9 மணி வரை இடைவிடாமல் மழை பெய்தும் காலையில் 50 உறுப்பினர்கள் கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்கொண்டது குறிப்பிடத்தக்கது. பேசி முடித்ததும் மழை கொட்டியது.
=த.அன்பழகன், மாவட்டச் செயலர் புதுச்சேரி
No comments:
Post a Comment