Sunday, October 23, 2022











புதுச்சேரி மாவட்ட சங்கத்தின் சார்பில்  தமிழ் மாநில செயலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள தோழர். S சுந்தர கிருஷ்ணன் மற்றும் மாநில அமைப்புச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள புதுச்சேரி தோழர் எம் சாம்பசிவம் இருவருக்கும் பாராட்டு விழா 20-10-22 அன்று புதுவை தமிழ் சங்கத்தில் மாவட்டத் துணைத் தலைவர்  தோழர்.மு. தண்டபாணி  தலைமையில் சிறப்பாக நடந்தது.
 
தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய பாராட்டு விழாவில், கடந்த 6 மாதத்திற்கான  செயல்பாட்டு அறிக்கையை மாவட்ட செயலர் தோழர் ஹரிஹரன் சமர்ப்பித்தார்.
தொடர்ந்து  மாநில செயலாளருக்கும், மாநில அமைப்பு செயலாளருக்கும் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கப்பட்டது. 
புதிய மாநில நிர்வாகிகளை மாவட்ட சங்கத்தின் சார்பில் தோழர்கள் P. காமராஜ், ச.சதாசிவம், நா. முனுசாமி,  கே. அசோகராஜன், M.V. ராமகிருஷ்ணன், K. R. ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர் ஹரிஹரன், K.R.  சிவக்குமார், மற்றும் N. பட்டாபி,   ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். 
மேலும் 70 வயதைக் கடந்த மூத்த தோழியர் திருமதி சாரதா வைத்தியநாதன், D.E (ஓய்வு), தோழர்கள் PR கணேசன் (SS) (ஓய்வு), ராஜவேலு (TM) (ஓய்வு) ஆகியோருக்கு மாநிலச் செயலாளர் அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார். 
 
தொடர்ந்து தோழர் எம். சாம்பசிவம் அவர்களின் ஏற்புரைக்குபின் தோழர் எஸ். சுந்தரகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் அவர்கள் தன் ஏற்புரையில் CGHS, MRS,. மெடிக்கல் அலவுன்ஸ், புதிதாக வழங்க இருக்கும் DOT ID CARD, 78.2% MERGER CASE, 1-1-2017 முதல் நிலுவையில் உள்ள ஓய்வூதிய மாற்றம் தொடர்பான செய்திகள், மற்றும் தோழர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் என அனைத்தையும் விளக்கிப் பேசினார். 
தோழர் K R சிவக்குமார் பொருளாளர், அவர்கள் நன்றி நவில விழா இனிதே நிறைவுற்றது.
தோழமையுடன், 
ஏ. ஹரிஹரன் மாவட்ட செயலர், புதுச்சேரி மாவட்டம்.


 

No comments:

Post a Comment