Tuesday, August 21, 2018

பூரி ஜகநாதர் கோயில் அதிசயம்

பூரி ஒரிஸ்ஸா மாநிலத்தில் கடலோரமாக இந்நகர் அமைந்துள்ளது. வைணவர்களுக்கு இது முக்கியமான தலம். இங்குள்ள ஜகந்நாதர் கோயில் புகழ் பெற்றது. இது 12ஆம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். கோயிலில் வழிபாடு செய்யவும், கடலில் நீராடவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகிறார்கள். கோயிலில் உள்ள சிற்பங்கள் மிக அழகானவை. பதினாறு பக்கங்கள் அமைந்த அழகிய கல்தூண் மண்டபம் ஒன்று இங்கு உள்ளது. பூரி ஜகநாதர் கோயிலின் உயரத்தை பார்த்து பிரமித்திருக்கிறோம்.(படத்தில்)அதில் மற்றுமொரு பிரமிப்பு 10 வயது பையன் தினமும் மாலை 5 மணிக்கு அந்த கோபுரத்தில் எந்த பிடிப்பும் இல்லாமல் ஏறி உச்சியில் பழைய கொடியை அவிழ்ந்துவிட்டு புதிதாக கொடி கட்டிவிட்டு இறங்குகிறான்.இதை.ஒரே குடும்பம் பரம்பரையாக செய்துவருகிறது.நாம் பூரி செல்லும்போது இந்த நிகழ்சசியை கண்டிப்பாக பார்க்கவேண்டும்

No comments:

Post a Comment

 தோழர்களே, அனைத்திந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கத்தின் புதுச்சேரி மாவட்டத்தின் சார்பில் இன்று  21.12.2023 ஓய்வூதியர் தினம் மிகச் ...