Sunday, March 20, 2022

புதுச்சேரி மாவட்ட மாநாடு

 புதுச்சேரி மாவட்ட மாநாடு 19-03-2022 அன்று புதுச்சேரி ஆர்ய வைசிய வாசவி மஹாலில் தோழர் கு.ரெ.சிவகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தேசிய கொடியை மாநில அமைப்பு செயலர் தோழர் மு.சாம்பசிவம் அவர்களும் சங்க கொடியை முன்னால் மாநில உதவிப் பொருளாளர் தோழர் ச.சதாசிவமும் ஏற்றினர். புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன்  மாநாட்டினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். தமிழ் மாநில செயலாளர் தோழர்  இரா.வெங்கடாசலம் துவக்க உரை ஆற்றினார்.ஆண்டு அறிக்கையை தோழர் த.அன்பழகனும் வரவு செலவு கணக்கை தோழர் இரா.லோகநாதனும் சமர்ப்பித்தனர்.அ.இ.துணைப் பொதுச்செயலாளர்  தோழர் க.முத்தியாலு,தமிழ் மாநில தலைவர் தோழர் வெ.ராமராவ் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.  மாநில உதவிச் செயலர் தோழர் சி.சுந்தரகிருஷ்னன்,மாநில அமைப்பு செயலர் தோழர் மு.சாம்பசிவம், BSNL நிர்வாகம் சார்பில் துணைப் பொது மேலாளர்  திரு மு.சண்முகசுந்தரம் SNEA  சங்கத்தின் சார்பாக தோழர் ப.ஹரிதாஸ், NFTE சங்க சார்பாக அதன் மாவட்ட செயலாளர் தோழர் சை.சையது அபுபக்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மூத்த தோழர்கள் கவுரவிக்க பட்டனர். மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக  தலைவராக  தோழர் த.அன்பழகன் செயலராக தோழர் A.ஹரிகரன் பொருளராக தோழர் கு.ரெ.சிவகுமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தோழர் இரா.லோகநாதன் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவு பெற்றது 

No comments:

Post a Comment