அனைவருக்கும் வணக்கம்.
நமது மாவட்ட செயற்குழு 9. 4.2022 அன்று மனமகிழ் மன்றத்தில் மாவட்டத் தலைவர் தோழர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
19 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தோழர்கள் அன்பழகன், ஹரிஹரன் ,அசோக ராஜன், சதாசிவம், முனுசாமி ,சிவலிங்கம் ரவணையா, சிவக்குமார், தனுசு ராமன் ,சேகரன், ரவிச்சந்திரன் ,தண்டபாணி ஆகியோர் விவாதத்தில் பங்கேற்றனர்.
தோழர்கள் அன்பழகன், லோகநாதன் ஆகியோர் கடந்த மாநாட்டின் வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தனர். செயற்குழு அதை ஏற்றுக் கொண்டது.
முடிவுகள் :
1.மாநாட்டை வெற்றிகரமாக்கிய அனைத்து உறுப்பினர்கள் ,அமைச்சர் லட்சுமி நாராயணன், மாநில சங்கத் தலைவர்கள்,நமது DGM, வாழ்த்துரை வழங்கிய மாற்று சங்கத் தலைவர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
2.நமது மாவட்ட சங்க புலனுக்கு
ழுவில் பதிவிடும் தேவையற்ற செய்திகள்,வீடியோக்கள், சாமி படங்கள் ,அறிவுரைகள் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். சங்க செய்திகள் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பதிவிட வேண்டும்.
அதேபோல் உறுப்பினர்களின் பிறந்தநாள் பதிவு மாவட்ட சங்கம் சார்பாக மட்டுமே பதிவிடப்படும் .மற்றவர்கள் பதிவிட வேண்டாம் என வேண்டுகோள் விடப்படுகிறது.
3.புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு இயக்கம் நடத்தப்பட வேண்டும்.
4.வருகிற 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழா அன்று தொலைபேசி வாயிலில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும்.
5.மே 1ஆம் தேதியன்று கொடியேற்று விழாவும் அதே மாதத்தில் மே தின விழா சிறப்புக் கூட்டமும் நடத்தப்பட வேண்டும் .
6.நமது ஓய்வூதியர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும்.
7.சொசைட்டியில் பாதிக்கப்பட்டிருக்கும் நமது சங்க உறுப்பினர்களின் பிரச்சினையை மாநிலச் சங்கத்திற்கு கொண்டு செல்லப்படும்.
8.முத்தக் குடிமகன்களுக்கு ரத்து செய்யப்பட்ட ரயில் கட்டண சலுகையை மீண்டும் அறிவிக்க வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு கடிதம் அனுப்புவது.
9.மூன்று மாதத்திற்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட வேண்டும். அதில் செயலாளர் வேலை அறிக்கையை தாக்கல் செய்வார்.
10.மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படாமல் இருக்கும் லோக் அதாலத் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்.
மேற்கண்ட முடிவுகள் அனைத்திற்கும் நமது உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
செயற்குழு சுமுகமாக முடிய ஒத்துழைப்பு நல்கிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
வாழ்க அனைத்திந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச்சங்கம் .
தோழமையுடன்
அ. ஹரிகரன்
மாவட்டச் செயலர்.
No comments:
Post a Comment