தோழர்களே நமது அகில இந்திய மாநாடு விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில், புதுவை சார்பாக 7 சார்பாளர்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
- தேசியக்கொடி மற்றும் சம்மேளன கொடிகள் மூத்த தோழர்களால் உயர்த்தப்பட்டது.
- தோழர் பக்ஷி, தலைவர்,RTOWA, NewDelhi, மற்றும் சம்மேளன தலைவர், உதவி தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைக்க மாநாடு இனிதே தொடங்கியது.
- மாநாட்டில் தோழர் ராமன் குட்டி,தலைவர் அவர்கள் பேசுகையில், AIBSNLPWA ஒரு ரெயின்போ அசோசியேசன்,2009 ல் அமைக்கப்பட்டது. இதுவரை 70 ஆயிரம் ஆயுள் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய ஒரு அசோசியேசன்.78.2% மற்றும் 60:40 தீர்வு ஆகியவற்றை வெற்றிகரமாக செய்த பெருமை நமது அசோசியேஷன் சாரும் என்று கூறினார். பென்ஷன் சம்பளம் மாற்றத்திலிருந்து விடுபட்டு ஓய்வூதிய மாற்றம் கிடைக்க தொடர்ந்து போராடுவோம் என்று உறுதி கூறினார்.
-2011 ல் தொடங்கப்பட்ட பென்ஷனர் பத்திரிகை, இதுவரை 57 பதிப்புகளை வெளியிட்டுள்ளது என்று கூறினார்.
* தோழர் D. கோபாலகிருஷ்ணன் உதவி தலைவர் அவர்கள் முதலாவதாக விசாகப்பட்டினம் ரிசப்ஷன் கமிட்டியை பாராட்டினார்.
- நமது சங்கம் தொடர்ந்து DOT ஐ அணுகி அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளது என்று பெருமையுடன் கூறினார். 20 ஆண்டுகாலமாக இருந்த பென்ஷன் நிலுவை பெற்றுத் தந்தது மிகச் சிறப்பு என்று கூறினார்.
-VRS ல் சென்றவர்களுக்கு, சம்பள பட்டுவாடா BSNL தாமதப்படுத்திய போதும், ப்ரொவிஷனல் பென்ஷன் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் Feb 2020, மாதக் கடைசியில் பெற்றுத் தந்தது அதற்காக முன் கை எடுத்ததைப் பற்றி கூறினார்.
-VRS 2019 ஓய் ஊதியர்கள் மிகப் பெரும்பான்மையான ஊழியர்களை நமது சங்கத்தில் இணைத்ததை பெருமையுடன் கூறினார்.
- ஏழாவது சம்பள குழு அடிப்படையில், பென்ஷன் மாற்றம் பெறுவது நமது கடமை என்று கூறினார்.
- பூரி மாநாட்டுக்குப் பிறகு ஆறு முறை DOT மற்றும் அமைச்சர்களை சந்தித்ததையும்,டாக்குமெண்டரி எவிடென்ஸ் உடன் தொடர்ந்து கடிதம் எழுதியதையும் குறிப்பிட்டார்.
- அதன் அடிப்படையில் மெம்பர் சர்வீசஸ், Delink ஆதரவாகவும், 0% fitment இல்லை எனவும் உறுதி கூறியதை நினைவு படுத்தினார்.
- நாம் தொடர்ந்து ஏழாவது சம்பள குழுவின் அடிப்படையில் ஓய்வூதிய மாற்றத்திற்கு உறுதியாக நிற்பதாக கூறினார். அகில இந்திய மாநாடும் இதனை ஒருமனதாக ஏற்றுக் கொண்டது.
==தோழர் கங்காதராவ் பொதுச் செயலாளர், பேசுகையில், CGHS பற்றி விரிவாக விள க்கியதுடன், நமது சங்கம் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக அரசாங்கம் அறிவித்துள்ளதை பெருமையுடன் கூறினார். இதன் காரணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் கிடைக்கும் என்று கூறினார்
1. Grant-in-Aid
2. நம்முடைய கருத்துக்களை கூறும் உரிமை.
3.DOP&PW நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் உரிமை.
4.DLC முகாம் நடத்தும்உரிமை.
- இதுவரை உள்ள 22 whatsapp குரூப்பில் 10 குரூப் மட்டுமே live ஆக உள்ளது என்றும் கூறினார்.
அகில இந்திய மாநாட்டில்
தோழர்.D. கோபாலகிருஷ்ணன், தலைவராகவும்,
தோழர் வரப் பிரசாதராவ், பொதுச் செயலாளராகவும்,
தோழர் விட்டோபன், பொருளாளராகவும், ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கடலூர் தோழர் பி. ஜெயராமன் அவர்கள் உதவி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதுவை மாவட்டத்தின் சார்பாக வந்திருந்த அனைத்து சார்பாளர்களுக்கும், உடன் கலந்து கொண்ட தோழர்களுக்கும், அனைத்து புதுவை தோழர்களுக்கும் மாவட்டச் சங்கத்தின் சார்பில் நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.டிசம்பர் 2 -3 ஆகிய தினங்களில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில், உதவித் தலைவர் தோழர் முத்தியாலு அவர்களின் சீரிய சொற்பொழிவு :
* கடந்த அகில இந்திய மாநாடு ஒரிசாவில் நடைபெற்ற போது நம்முடைய உறுப்பினர் எண்ணிக்கை 44,000. ஆனால் தற்போது எண்ணிக்கை 66,000. நான்கு ஆண்டுகளில் உறுப்பினர் எண்ணிக்கை 22,000 உயர்ந்துள்ளது. கோவிட் பாதிப்பிலும் உறுப்பினர் எண்ணிக்கை உயர காரணமாக இருந்த கிளை, மாவட்ட, மாநில சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
** மொத்தம் உள்ள 66,000 உறுப்பினர்களில், தென் மாநிலங்கள் மற்றும் 49000 உறுப்பினர்களை கொண்டுள்ளது. மற்ற 16 மாநிலங்களில் மொத்த எண்ணிக்கை 17000. அம் மாநிலங்களில் நாம் கூடுதல் கவனம் செலுத்தி மேலும் உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்று கூறினார்.
*** இமாச்சலப் பிரதேசத் தில் நமது சங்கம் புதியதாக உருவாகியுள்ளதாகவும், ஜம்மு காஷ்மீரில் நமது அமைப்பு இல்லை என்றும் கூறினார்.
**** விருப்பஓய்வில் சென்ற 78569 ஊழியர்களில்,22953 ஊழியர்களே உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர் என்றும்,55616 ஊழியர்கள் சேர்க்கப்படவில்லை எனவும், இவர்களையும் இணைக்க நமது தோழர்கள் பாடுபட வேண்டும் என்று கூறினார்.
***** இந்தியாவிலேயே தமிழகம் அதிகபட்சமாக 15148 உறுப்பினர்களைக் கொண்டு, முதல் மாநிலமாக திகழ்கிறது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
****** வருங்காலத்தில் நாம் AIBSNLPWA இல்லாத மாநிலம், மாவட்டம் இல்லை என்ற நிலையை உருவாக்க ஒற்றுமையுடன் பாடுபட்டு உறுப்பினர் எண்ணிக்கையை மேலும் உயர்த்தி சங்கத்தை மேலும் வலுப் பெற செய்ய வேண்டும் என்று கூறினார்.
தோழமையுடன் ஹரிஹரன், மாவட்ட செயலர், புதுச்சேரி மாவட்டம்.
No comments:
Post a Comment